Hedging Meaning in Tamil
பொதுவாக நமது தாய் மொழியான தமிழில் உள்ள ஒரு சில வார்த்தைகளுக்கான சரியான அர்த்தமே நமக்கு தெரியாது என்பது கசப்பான உண்மை. இந்நிலையில் ஆங்கிலத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளுக்கான சரியான அர்த்தமும் பொருளும் நமக்கு முழுமையாக தெரிந்திருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. அதிலும் ஆங்கில மொழியில் உள்ள பல வார்த்தைகளுக்கு நமது தமிழ் மொழியில் ஒன்றுக்கும் மேற்பட்ட அர்த்தம் கூறப்படும் அதில் எது சரியான அர்த்தம் என்பதை நாம் அறிந்து கொள்வது மிகவும் கடினமான ஒரு செயலாகும். அதனால் தான் நமது பொதுநலம்.காம் பதிவின் மூலம் தினமும் ஒரு ஆங்கில மொழி வார்த்தைக்கான சரியான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் Hedging என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அந்த வார்த்தைக்கான சரியான அர்த்தத்தை அறிந்து கொள்ளுங்கள்.
Dyslexia என்ற வார்த்தைக்கான அர்த்தம் உங்களுக்கு தெரியுமா
ஹெட்ஜிங் என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?
Hedging என்ற வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அதனை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Hedging என்ற வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் என்ன என்றால் இழப்புக்காப்பு அல்லது இழப்புக்காப்பீடு என்பது ஆகும்.
ஹெட்ஜிங் என்றால் என்ன..?
Hedging என்பது ஒரு சொத்தின் விலையில் ஏற்படும் ரிஸ்க் அளவை குறைக்கும் நோக்கத்தில் செய்யப்படும் முதலீடு ஆகும். இதனை எளிமையான முறையில் புரிந்து கொள்வதற்காக ஒரு உதாரணத்தை பார்ப்போம்.
அதாவது ஒருவர் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய இடத்தில் வீடு வைத்திருப்பவர்கள், வெள்ளம் ஏற்படும் போது வீட்டை இழக்க கூடும்.
Myositis என்பதற்கான உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா
இதன் காரணமாக வீட்டின் உரிமையாளர் வீட்டுக்கு காப்பீடு எடுப்பார். இதன் மூலம் வீடு வெள்ளத்தால் பாதிக்கப்படும் போது அதற்கு உரிய நிதியை காப்பீடு நிறுவனத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
இதனால் வீடு வெள்ளத்தில் பாதிக்கப்படும் போது ஏற்படும் இழப்பில் இருந்து தப்பிக்க முடியும் இல்லையா? இது போல சொத்தின் ரிஸ்க் அளவை குறைக்க அதற்கு இணையான ஏற்பாடுகளை செய்வது Hedging என்று அழைக்கிறோம்.
Bias என்ற வார்த்தைக்கு இப்படி ஒரு அர்த்தம் உள்ளதா இத்தனை நாளா இது தெரியாம போச்சே
Ewe என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |