தேவதாரு மரம் | Pine Tree
வணக்கம் நண்பர்களே… இன்று நம் பொதுநலம் பதிவில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவலை பற்றி பார்க்கப்போகிறோம். தேவதாரு மரம் என்றால் என்ன… அந்த மரம் எதற்கு பயன்படுகிறது. அதன் ஆரோக்கிய பயன்கள் போன்ற தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க…
தேவதாரு மரம் என்றால் என்ன:
இந்த தேவதாரு மரம் குளிர் பிரதேசங்களிலும், மலை பகுதிகளிலும் அதிகளவில் காணப்படுகின்றன. இந்த மரம் உயரமாக வளரக்கூடியது. இந்த மரத்தில் தேவர்கள் தவம் செய்து வந்ததால் இந்த மரம் தேவதாரு மரம் என்று பெயர்பெற்றது. தேவதாரு மரம் ஊசி இலை மர வகைகளில் ஓன்று. இந்த மரத்தின் மரக்கட்டைகள் கணம் குறைந்ததாக இருக்கும். இந்த மரத்தின் உச்சி பகுதி கூம்பு வடிவத்தில் இருக்கும். தேவதாரு மரம் இசைக்கருவிகள் செய்ய பயன்படுகிறது. இந்த தேவதாரு மரம் மர பலகைகள் செய்வதற்கும் படகு போன்றவை செய்வதற்கும் பயன்படுகிறது.
வீட்டு பொருட்கள் மற்றும் மர சாமான்கள் செய்ய இந்த மரம் பயன்படுகிறது. இந்த மரத்தை ஆங்கிலத்தில் Pine Tree அல்லது Fir Tree என்று கூறப்படுகிறது. இந்த மரத்தை கிறிஸ்துமஸ் காலங்களில் அலங்கரித்து கிறிஸ்துமஸ் மரமாக பயன்படுத்துகிறார்கள். இந்த தேவதாரு மரக்கட்டைகள் விலை உயர்ந்தவையாக உள்ளது. இந்த மரத்தின் இலைகள், பட்டைகள் போன்றவை மருத்துவ பொருட்களாக பயன்படுகிறது.
இதையும் படியுங்கள் ⇒ மரங்கள் மற்றும் அதன் பயன்கள்
தேவதாரு மரம் பயன்கள்:
- இந்த மரம் அனைத்து விதமான காய்ச்சல் மற்றும் வறட்டு இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.
- நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்கிறது.
- ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கும் இந்த மரம் நல்ல பலனை கொடுக்கிறது.
- அடிபட்ட காயங்கள் மற்றும் ஆறாத புண்கள் போன்றவற்றிற்கு இந்த தேவதாரு மரம் பயன்படுகிறது.
- தலைவலிக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.
- தோல் சம்மந்தப்பட்ட அரிப்பு, தோல் எரிச்சல், தோல் வறட்சி போன்ற பிரச்சனைகளுக்கு இது பயன்படுகிறது.
- பக்கவாதம் மற்றும் வலிப்பு நோய் போன்ற பிரச்சனைகளை தடுக்க பயன்படுகிறது.
- இந்த மர குச்சிகளை எரித்து அதில் சாம்பிராணி போடுவதால் சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்குகிறது.
- இரத்த அழுத்தம், இரத்த சோகை மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை போக்குகிறது.
- சிறுநீரக பாதையில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்கிறது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |