RIP Meaning in Tamil
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் RIP என்றால் என்ன அவை எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்று தெரிந்துகொள்ளலாம். பொதுவாகவே சிலர் வாட்ஸ் ஆப், பேஸ்புக், டுவிட்டர், போன்ற வலைத்தளங்களில் அதிகமாக இந்த RIP என்ற வார்த்தையை அதிகமாக கவனித்து வந்திருப்போம். ஆனால் அவை எதை குறித்து போட படுகிறது என்று சிலருக்கு தெரிவதில்லை. ஒரு மனிதன் பிறப்பதற்கு சந்தோஷமடைந்து வாழ்த்துவதற்கு எப்படி அவர்களை வாழ்த்துகிறோம், அதே அந்த மனிதன் இறந்தவுடன் என்ன சொல்வார்கள் என்றுதான் தெரிந்துகொள்ள போகிறோம். மேலும் RIP எதற்கு பயன்படுகிறது என்று பார்க்கலாம் வாங்க.
சுபஹானல்லாஹ் அர்த்தம் |
Rest in Peace Meaning in Tamil:
ஒரு மனிதனின் பிறப்பு எவ்வளவு முக்கியத்துவத்தை தருகிறதோ அதை அளவு மனிதனின் இறப்பு ஆனது RIP என்ற வார்த்தைகளில் முடிகின்றது.
HBD என்ற அளவிற்கு அருவருப்பூட்டும் இன்னொரு சொல் RIP ஆகும். இதை ஆங்கிலத்தில் சொற்குறுக்கம் (Abbreviation) என்று சொல்லப்படுகிறது.
RIP என்பதற்கான முழு அர்த்தம் Rest in peace என்று அழைக்கப்படுகிறது. இலத்தீன் மொழிகளில் இதற்கு Requiescat in pace என்று கிறிஸ்தவ வழிபாடுகளில் ஆங்கில வார்த்தையாகும்.
RIP என்பதற்கு தமிழ் பல பொருள்கள் உள்ளன. ஒரு மனிதன் இறந்தவுடன் அவர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்கு சொல்ல கூடிய ஒரு வேண்டுதல் ஆகும்.
- அமைதியில் ஓய்வு பெறுக
- அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும்
- நிம்மதியாக காத்திருங்கள்
இது போன்ற வார்த்தைகளால் ஒருவருடைய மரணத்திற்கு பிறகு அவர்களின் ஆத்மா அமைதியை காணுவதற்காகவும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்காகவும் கூறப்படும் வார்த்தைகள் ஆகும்.
கிறிஸ்த்துவர்களின் கலாச்சாரம் படி ஒரு மனிதன் இறந்தவுடன் அவனை புதைப்பது தான் வழக்கம், அந்தவகையில் அந்த மனிதன் புதைக்கப்படும் பொழுது அவர்களின் ஆன்மாவும் அதோடோடு சேர்ந்து புதைக்கப்படுகிறது என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
கிறிஸ்த்துவர்களின் ஜட்ஜ்மெண்ட் டே என்ற அழைக்கப்படும் இந்த தினமானது இறந்த இயேசு மீண்டும் திரும்பி வருவதாக ஒரு நம்பிக்கை. அந்த நாளில் இறந்தவர்கள் கல்லறையில் காத்திருந்து நரகத்திற்கோ அல்லது சேர்க்கத்திற்கோ அனுப்பப்படுபவதாக சொல்லப்படுகிறது.
எனவே இறந்தவர்கள் செய்த பாவங்கள் மற்றும் புண்ணியங்கள் படி அவர்கள் இறந்தவுடன் Rest in peace என்று நிம்மதியாக காத்திருங்கள் என்று சொல்லப்படும் வார்த்தைகள் ஆகும்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |