Saving Account Meaning in Tamil
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் Saving Account பற்றி உங்களுக்கு தெரியாத விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள். பணம் என்பது அனைவருக்கும் அதியவசமான ஒன்று. அந்த பணத்தை எதாவது ஒரு வங்கியில் உங்களுடைய பெயரில் கணக்கு ஆரம்பித்து சேமித்து வருகிறீர்கள். நவீன காலத்தில் நீங்கள் சேமித்த அந்த பணத்தை வங்கிக்கு செல்லாமல் ATM-ற்கு சென்று உங்களுக்கு தேவையான பணத்தை எடுத்து கொள்ளலாம்.
அது மாதிரி நீங்கள் ATM-இல் பணம் எடுக்கும் போது saving account அல்லது current account என்ற option-நில் ஒன்றை தேர்வு செய்ய சொல்லும். அதில் அதிகமாக அனைவரும் saving account என்ற option-னை தேர்வு செய்கின்றனர். ஆனால் அந்த saving account பற்றி உங்களுக்கு தெரியாத நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதை பற்றி விரிவாக இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
Saving Account என்றால் என்ன.?
பொதுவாக வங்கி கணக்குகளில் 2 வகையான திட்டங்கள் உள்ளன. அதில் ஒன்று Saving Account மற்றொன்று Current Account. இதில் மக்கள் தங்களுடைய பணத்தை அவரவர் கணக்குகளில் எவ்வளவு பணத்தை முதலீடு செய்து வருகின்றனர் என்பதன் மொத்த கணக்கே CASA என்பது ஆகும்.
Saving Account என்ற பெயரில் சொல்லப்பட்டுள்ளது போல சேமிப்பிற்கு மட்டுமே தனி நோக்கமாக கொண்டு உருவாக்கப் பட்டதாகும். அதில் ஒருவர் தனியாகவோ அல்லது கூட்டமாகவோ தங்களுடைய கணக்கை தொடங்கலாம்.
இந்த மாதிரி வங்கி கணக்குகளில் ஒருவர் தன்னுடைய குறைந்த பட்ச இருப்பு தொகையாக பொதுத்துறை வங்கி கணக்காக இருத்தால் 1000 ரூபாய் அல்லது தனியார் துறை வங்கி கணக்காக இருந்தால் 10,000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகையினை கட்டாயமாக வைத்து இருக்க வேண்டும்.
Saving Account-ல் நீங்கள் பண வர்த்தனை செய்வது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் மட்டுமே இருக்க வேண்டியது அவசியமான ஒன்று.
Current Account விட Saving Account– ற்கு என்று ஒரு தனி விகித வட்டி இருக்கிறது.
ஒரு வருடத்தில் சுமார் ரூபாய் 10 லட்சத்திற்கு மேல் பண பரிவர்த்தனை செய்பவர் யாராக இருந்தாலும் அதனை வருமான துறையிடம் வங்கி தெரிவித்துவிடும்.
அப்படி நீங்கள் நிறைய பண பரிவர்த்தனை செய்பவராகவோ அல்லது அதிகமாக Cheque வழங்குபவராகவோ இருந்தால் உங்களுடைய பண வரி வர்த்தனையை பற்றி அறிந்து கொள்ளும் உரிமை வங்கிக்கு உண்டு.
அதுமட்டும் இல்லாமல் பண வரி வர்த்தனையை பற்றி கேள்வி எழுப்பும் முழு உரிமையும் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்⇒ USSD Code என்றால் என்ன தெரியுமா.?
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |