SWIFT Code Meaning in Tamil..!
வணக்கம் அன்பான நேயர்களே… இன்றைய பதிவில் SWIFT Code என்றால் என்ன..? அது எதற்கு பயன்படுகிறது என்ற முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த SWIFT Code முறை வங்கிகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த SWIFT Code -யை பயன்படுத்தி வங்கிகளில் பணப் பரிமாற்றம் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் செய்து கொள்ள முடியும். மேலும் SWIFT Code பற்றிய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இதையும் பாருங்கள் ⇒ IFSC Code என்றால் என்ன
SWIFT என்றால் என்ன..?
SWIFT என்பது வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்பு சமூகம் ஆகும். இந்த முறையானது உலகளாவிய பணப் பரிமாற்றங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் போன்றவற்றை நிதி நிறுவனங்கள் பரிமாறிக் கொள்வதற்காக கொண்டு வரப்பட்ட பாதுகாப்பு தளமாகும். இந்த SWIFT முறை தமிழில் தொலைப் பரிவர்த்தனைக் கழகம் என்று கூறப்படுகிறது.
இந்த SWIFT முறையானது 1973 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த SWIFT Code 200 -க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இடையே ஒரு சிறந்த அமைப்பாக செயல்படுகிறது.
இந்த SWIFT முறையை பயன்படுத்தி வங்கிகளுக்கு இடையே பணப் பரிமாற்றங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் பல கட்டுப்பாட்டு அம்சங்களுடனும் பாதுகாப்பான முறையிலும் கொண்டு செல்லும் ஒரு செயலி ஆகும்.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ NEFT என்றால் என்ன..?
swift Full Form in Tamil:
SWIFT ஆங்கிலத்தில் Society for Worldwide Interbank Financial Telecommunications என்று அழைக்கப்படுகிறது. இந்த SWIFT முறையை பயன்படுத்தி உலக வங்கிகள் அனைத்தும் பணப் பரிவர்த்தனைகள் செய்து கொள்கின்றன.
இந்த SWIFT முறையை கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா ஆகிய பதினொரு தொழில்துறை நாடுகளின் மத்திய வங்கிகளால் கண்காணிக்கப்படுகிறது.
இந்த SWIFT முறையை சர்வதேச வரத்தக நிதிப் பரிவர்த்தனை என்றும் கூறலாம். சர்வதேச ரீதியான எல்லா வர்த்தக வங்கி நடவடிக்கைகளையும் இணைக்கும் ஒரு அமைப்பாக இந்த SWIFT செயல்பட்டு வருகிறது.
நம் நாட்டில் உள்ள பணப் பரிவர்த்தனைகள் மற்றும் மற்ற நாடுகளுக்கு கொடுக்கும் பணப் பரிமாற்றங்கள் இந்த SWIFT அமைப்பின் மூலமாக வேகமாகவும் அதே நேரத்தில் பாதுகாப்பாகவும் செயல்பட்டு வருகிறது.
இந்த SWIFT முறையை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெட்ரோலியப் பொருட்களுக்கான பணத்தை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த SWIFT முறையானது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக செயல்பட்டு வருகிறது. இந்த முறையானது உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் நிதியை மாற்ற அனுமதிக்கிறது.
அதுபோல நீங்கள் இந்த SWIFT முறையை பயன்படுத்தி பணம் அனுப்பும் போது நீங்கள் சொந்த வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |