இணையதளம் பற்றிய விவரங்கள்

Advertisement

இணையதளம் | website 

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் இணையதளத்தின் அர்த்தத்தை பற்றி தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். இணையத்தளம் என்பது பல தகவல்களை கொண்டுள்ள பக்கங்களின் தொகுதியாகும். இணையதளத்தின் மூலமாக நம் கருத்துக்களை பலருக்கும் தெரிவிக்க கூடியதுதான் இதன் முக்கிய அம்சங்கள் ஆகும். இணையதளத்தை உபயோகிப்பாதால் உலகில் யாரோ ஒருவர் வெளியிடும் கருத்துக்களை இதன் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். இதன் மூலம் படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல தகவல்களை வீட்டில் இருந்தபடியே கற்றுக்கொள்வதற்கும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இணையதளத்தின் அர்த்தகளையும் அவற்றின் முக்கியத்துவங்களையும் தெரிந்துகொள்ளலாம் வாங்க..

மால்வேர் என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா

இணையத்தளம் அர்த்தம் | Website Meaning in Tamil:

இணையத்தளம் செயல்பாட்டுக்கு வந்த ஆண்டு ஆகஸ்ட் 06, 1991 ஆகும். இவை CERN என்ற நிறுவனத்தின் மூலம்  Tim Berners-Lee  என்பவரால் உருவாக்கப்பட்டவையாகும்.

இணையத்தளம் (website)  என்பது பல தகவல்களை  சேமிக்க கூடிய ஒரு இணையப்பக்கங்களின் தொகுப்பு ஆகும்.

இதன் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களை டொமைன் (domain) மூலம் பிரௌசர் (browser) உதவியுடன் திறந்து பார்க்க முடியும். இணையத்தளமானது முழு பக்க முகவரி வெப்சைட் (website URL) என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக https://www.pothunalam.com/ இது ஒரு (website URL)  என்று சொல்லப்படுகிறது.

இணையத்தளம் என்பது இணையத்தில் கிடைக்க கூடிய வலைப்பக்கங்களின் தொகுப்பாகும்.

வலைத்தளம் என்பது படங்கள், வீடியோ, பாடல், உரை போன்ற பலவிதமான செய்திகளை தொடர்புடையதே வலைத்தளமாகும்.

இன்றைய காலகட்டத்தில் யார் வேண்டுமானாலும் இணையதளத்தை உபயோகிக்கலாம். நிறுவனங்கள், மாணவர்கள், அறிவியல் ஆராச்சியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தனிநபர்கள் என  பலரும் தங்களுக்கு தேவையான கருத்துக்களை வெளியிடுவதற்கு, மேலும் அறியாத கருத்துக்களை தெரிந்து கொள்வதற்கும் இணையத்தளம் முக்கிய இடம்பெற்றுள்ளது. உதாரணத்திற்கு தொழில்களில் இலாபம் இல்லை என்றால் இணையதளம் மூலம் உங்களின் பொருள்களை கூறி விற்றுவிட முடியும். இன்னும் பல நன்மைகளை தெரிந்துகொள்வதற்கும்,  கற்றுக்கொள்வதற்கும்  இணையத்தளம் உதவியாக இருக்கிறது. 

  வலைதளத்தின் வகைகள் | Types of Website in Tamil:

  1. நிறுவன வலைத்தளங்கள்
  2. தனிப்பட்ட வலைத்தளங்கள்
  3. மின் வணிகம் வலைத்தளங்கள்
  4. வலைப்பதிவு வலைத்தளங்கள்
  5. சமூக ஊடக வலைத்தளங்கள்
  6. நிறுவனத்தின் வலைத்தளங்கள்
  7. போர்ட்ஃபோலியோ வலைத்தளங்கள்
  8. செய்தி வலைத்தளங்கள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement