முகம் சுருக்கம் நீங்க சில எளிய அழகு குறிப்புகள் ..!

Advertisement

முக சுருக்கம் நீங்க சில எளிய அழகு குறிப்புகள் (Beauty tips in tamil)..!

முக சுருக்கம் மறைய: சிலருக்கு முகத்தில் தோன்றும் மேடு பள்ளங்கள் அவர்களது சரும அழகை மிகவும் பாதிக்கின்றது. அதுவும் குறிப்பாக பெண்கள், ஆண்கள் என இருபாலரும் சந்திக்கும் ஓர் சரும பிரச்சனை தான் முகப்பரு.

ஒருவருக்கு முகப்பரு வந்தால், அந்த பரு போவதற்குள் முகத்தின் அழகே பாழாகிவிடும்.

எனவே பலரும் முகப்பருக்களைப் போக்க கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள்.

இருப்பினும் பருக்கள் மறைந்திருக்காது. சில சமயங்களில், கண்ணாடியில் முகத்தைப் பார்க்கும் போது, அசிங்கமாக இருக்கும் பருக்களை சிலர் கிள்ளிவிடுவார்கள்.

இந்த பருக்களை கிள்ளிவிடுவதன் காரணமாக முகத்தில் தோன்றுவது தான் மேடு பள்ளங்கள்.

முக பருக்கள் இருக்கும் போது கூட முக அழகு பாதிக்காது. ஆனால் பருக்கள் போகும்போது விட்டு செல்லும் தழும்புகள் தான் சரும அழகை பாதிக்கின்றது.

இந்த முகத்தில் தோன்றும் மேடு பள்ளங்களை மறைய செய்வதற்கு, நம் வீட்டில் இருக்கும் சில பொருட்கள் உதவுகிறது.

இதையும் படியுங்கள் முகப்பருவை போக்கும் வீட்டு மருத்துவம்..! கரும்புள்ளிகள் போக என்ன செய்ய வேண்டும்?

சரி வாங்க முழ அழகை பாதுகாக்க சில வீட்டு அழகு குறிப்புகள் டிப்ஸை (Beauty tips in tamil) சொல்றேன் வாங்க..!

முகம் சுருக்கம் நீங்க ஐஸ் கட்டி மசாஜ்:

இந்த முகம் சுருக்கம் நீங்க ஐஸ் கட்டிகளைக் கொண்டு தினமும் 10 நிமிடம் மசாஜ் செய்தால், சரும செல்கள் குளிர்ச்சியடைவதோடு, முகத்தில் தோன்றும் மேடு பள்ளங்கள் மற்றும் முகம் சுருக்கம் நீங்க ஆரம்பிக்கும்.

முகம் சுருக்கம் நீங்க தயிர் மசாஜ்:

தயிரில் உள்ள புரோபயோடிக்ஸ் மற்றும் லாக்டிக் அமிலம், சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்.

அதற்கு தயிரை முகத்தில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

இதனால் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறுவதோடு, சருமத்துளைகளும் சுருங்கும்.

முகம் சுருக்கம் நீங்க பேக்கிங் சோடா அழகு குறிப்புகள் (Beauty tips in tamil):

பேக்கிங் சோடா சருமத்தின் pH அளவை சீராக பராமரித்து, சருமத் துளைகளை சுருங்கச் செய்யும்.

அதற்கு ஒரு பௌலில் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் உலர வைத்து பின் கழுவ வேண்டும்.

இதனால் சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத் துளைகளும் சுருங்கும்.

முகம் சுருக்கம் நீங்க முட்டை வெள்ளைக்கரு:

முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் எடுத்து கொள்ளவும். அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின்பு முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்கவும், பின்பு முகத்தை கழுவ சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்படும்.

மேலும் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி முகத்தில் தோன்றும் மேடு பள்ளங்கள் மறையும்.

முகம் சுருக்கம் நீங்க ஆப்பிள் சீடர் வினிகர் அழகு குறிப்புகள் (Beauty tips in tamil):

ஆப்பிள் சீடர் வினிகர் கூட சருமத் துளைகளை மூட உதவும்.

அதற்கு அதனை சிறிது நீரில் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் பொலிவும் மேம்படும்.

இதையும் படியுங்கள் முகத்தை ஜொலிஜொலிக்க செய்யும் அழகு குறிப்பு டிப்ஸ்..!

முகம் சுருக்கம் நீங்க வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காயை சாப்பிடுவதுடன், அதன் சாற்றினை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, சருமத் துளைகள் சுருங்க ஆரம்பிக்கும்.

முகம் சுருக்கம் நீங்க களிமண் மாஸ்க்:

களிமண் மாஸ்க்கை போட்டால், சருமத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

குறிப்பாக களிமண் மாஸ்க் சருமத் துளைகளில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் அழுக்குகளை உறிஞ்சி வெளியேற்றி, சருமத்துளைகளை சுருங்கச் செய்யும்.

அதற்கு ஒரு பௌலில் களிமண்ணை போட்டு, அதனை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.

முகம் சுருக்கம் நீங்க எலுமிச்சை மற்றும் சர்க்கரை:

உங்கள் முகத்தில் மேடு பள்ளங்களுடன், கரும்புள்ளிகளும் இருந்தால், எலுமிச்சை சாற்றில் சர்க்கரை சேர்த்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து, கழுவ வேண்டும்.

இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள மேடு பள்ளங்கள் விரைவில் மறையும்.

இதையும் படியுங்கள் முக அழகை காக்க இயற்கை ஃபேஷியல் !!!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami
Advertisement