தலைமுடி பிரச்சனை அனைத்திற்கும் ஒரே தீர்வு இந்த ஹேர் பேக் தான்..! ஒரு முறை மட்டும் ட்ரை செய்து பாருங்க..!

All Hair Problems One Solution Hair Pack in Tamil

All Hair Problems One Solution Hair Pack 

வணக்கம் நண்பர்களே..! பொதுநலம் பதிவின் வாசகர்கள் அனைவருக்கும் இந்த பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி முடி உதிர்வு, பொடுகு போன்ற பிரச்சனை இருக்கும். ஆனால் பெண்களுக்கு இந்த பிரச்சனைகளுடன் முடி வளரவே இல்லை என்ற பிரச்சனையும் இருக்கும்.

இந்த தலைமுடி பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என்பதற்காக கெமிக்கல் சேர்க்கப்பட்ட எண்ணெய்கள் மற்றும் ஷாம்புக்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் நாளடைவில் மேலும் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. அதனால் உங்களுக்கு உதவும் வகையில் தலைமுடி பிரச்சனைகள் அனைத்திருக்கும் ஒரே தீர்வு தரும் ஹேர் பேக் எப்படி செய்வது என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

All Hair Problems One Solution Hair Pack in Tamil:

  1. கற்றாழை – 1
  2. செம்பருத்தி இலை – 1 கைப்பிடி அளவு
  3. செம்பருத்தி பூ – 6
  4. எலுமிச்சை பழம்
நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு முடி வளர வேண்டுமா  அப்போ இந்த எண்ணெயை தடவுங்க

கற்றாழை எடுத்து கொள்ளவும்:

கற்றாழை எடுத்து கொள்ளவும்

முதலில் கற்றாழையை உங்கள் முடிக்கு தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும். பின் அதை சுத்தமாக கழுவி கொள்ளவும். பின் அதன் தோலை மட்டும் நீக்கிவிட்டு ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

கற்றாழை முடி ஆரோகியத்திற்கு மிகவும் உதவுகிறது. இதில் இருக்கும் சத்துக்கள் முடியை ஆரோக்கியமாக வளர செய்யும். மேலும் முடி நீளமாக வளரவும் சைனிங்காகவும் இருக்க கற்றாழை உதவுகிறது.

மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும்:

மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும்

அடுத்து ஒரு மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும். பின் அதில் நாள் எடுத்து வைத்துள்ள கற்றாழை ஜெல்லை சேர்த்து கொள்ளவும். பின் அதனுடன் 1 கைப்பிடி அளவு செம்பருத்தி இலை, 6 செம்பருத்தி பூ மற்றும் பாதி எலுமிச்சை பழத்தின் சாறு இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து கொள்ள வேண்டும்.

பின் அதை தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ள வேண்டும். இப்பொழுது ஹேர் பேக் தயாராகி விட்டது.

👉 உங்கள் முடிக்கு இந்த எண்ணெயை மட்டும் தடவி பாருங்க நீங்களே போதும் போதும்னு சொல்ற அளவுக்கு முடி வளர்ந்துவிடும் 

ஹேர் பேக் அப்ளை செய்யும் முறை:

all hair problems one solution

இந்த ஹேர் பேக்கை தலையில் அப்ளை செய்வதற்கு உங்கள் தலைமுடியை 2 பாதியாக பிரித்து கொள்ளவும். பின் இதை உங்கள் முடியின் வேர் பகுதியில் இருந்து நுனி வரை அப்ளை செய்ய வேண்டும்.

இதை உங்கள் தலையில் 20 லிருந்து 30 நிமிடம் வரை வைத்திருந்து பின் தலை முடியை அலசிக்கொள்ள வேண்டும். ஷாம்பு பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு தேவை என்றால் ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலையை அலசி கொள்ளலாம்.

இதுபோல வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் உங்கள் பொடுகு, முடி உதிர்வு  போன்ற தலைமுடி பிரச்சனை அனைத்தும் நீங்கிவிடும். நீங்களும் இதுபோல ட்ரை செய்து பாருங்கள் அதிசயத்தை நீங்களே காண்பீர்கள்.

ஒரே இரவில் முகத்தில் இருக்கும் சுருக்கம் மறைந்து முகம் இளமையாக மாற காபித்தூள் மட்டும் போதும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil