உங்கள் சருமத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!

Advertisement

All Skin Problems One Solution

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே சரும ரீதியாக பல பிரச்சனைகள் இருக்கும். அதாவது முகப்பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் முக கருமை போன்ற பிரச்சனைகள் வருவது இயற்கை தான். நாம் அதை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்யலாம்.

ஆனால் நாம் அதை விட்டுவிட்டு கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றோம். அதனால் நாளடைவில் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. அந்த வகையில் இன்று சருமத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வை இந்த பதிவின் மூலம் காணலாம் வாங்க..!

All Skin Problems One Solution Home Remedies in Tamil:

  1. அரிசி மாவு – 2 ஸ்பூன்
  2. பால் – தேவையான அளவு

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் பச்சரிசி மாவை 2 ஸ்பூன் அல்லது உங்கள் முகத்திற்கு தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் காய்ச்சாத பால் பேஸ்ட் செய்ய தேவையான அளவு ஊற்றி கொள்ள வேண்டும். பின் இரண்டையும் நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ளவும்.

வால் போல் இருக்கும் உங்க முடியை கட்டுக்கடங்காமல் காடு போல் வளர வைக்க இதை மட்டும் பண்ணுங்க போதும்

இப்பொழுது இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த பேஸ்ட் உங்கள் முகத்தில் குறைந்தது 15 நிமிடம் அப்படியே இருக்கட்டும். பின் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளவும்.

 இதுபோல வாரத்திற்கு 3 முறை அல்லது தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள், தழும்புகள், முகச்சுருக்கம் மற்றும் முகக்கருமை போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.  

தயிர் எடுத்து கொள்ளவும்:

தயிர் எடுத்து கொள்ளவும்

அடுத்து ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் அளவிற்கு தயிர் எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் 1 ஸ்பூன் அளவிற்கு தேன் சேர்த்து பேஸ்ட் போல நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்யவும். இந்த பேஸ்ட் உங்கள் முகத்தில் 15 நிமிடம் வைத்திருந்து பின் உங்கள் முகத்தை கழுவி கொள்ளவும்.

இதுபோல தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் படிப்படியாக நீங்கிவிடும். மேலும் உங்கள் முகம் எப்பொழுதும் பளபளப்பாக இருக்கும்.

மெலிந்து வால் போல இருக்கும் முடியை அடர்த்தியாக மாற்ற இந்த ஒரு எண்ணெய் போதும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement