ஒரே நாளில் முகம் வெள்ளையாக கற்றாழை ஜெல் | Aloe Vera and Sugar for Skin Whitening
இன்றைய காலகட்டத்தில் பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி சரும அழகை அதிகரிக்க பலவகையான அழகை சத்தான பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்துகின்றன. இது இயற்கையான முறையில் தயார் செய்யப்பட்டிருந்தால் ஒன்று பிரச்சனை இல்லை, அதுவே செயற்கையான முறையில் தயார் செய்திருந்தால் அது நமது சருமத்திற்கு தான் பலவகையான பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்கும். ஆக நமது சருமத்திற்கு இறக்கையான முறையை பயன்படுத்துவது தான் மிகவும் சிறந்தது. சரி இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது இயற்கையான முறையில் முகத்தை வெள்ளையாக்க ஒரு அழகு குறிப்பை பற்றி தான் பார்க்க போகிறோம். சரி வாங்க அது என்ன அழகு குறிப்பு என்று இப்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- பவுடர் செய்த சர்க்கரை – இரண்டு ஸ்பூன்
- கற்றாழை ஜெல் – இரண்டு ஸ்பூன்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பாலுடன் இதை மட்டும் கலந்து போட்டால் போதும்..! முகம் செம பிரைட்டா இருக்கும்..!
செய்முறை:
ஒரு சுத்தமான பவுலை எடுத்துக்கொள்ளவும், அதில் பவுடர் செய்த சர்க்கரை இரண்டு ஸ்பூன் மற்றும் கற்றாழை ஜெல் இரணடு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். அவ்வளவு தான் பேஸ் பேக் தயார் இதனை பயன்படுத்து முறையை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
பயன்படுத்து முறை:
இந்த பேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்வதற்கு முன் முகத்தை சுத்தமாக கழுவி கொள்ளவும். பின் முகத்தில் இந்த பேஸ் பேக்கை முகத்தில் நன்றாக அப்ளை செய்து ஒரு நிமிடம் வரை மசாஜ் செய்ய வேண்டும். பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு மசாஜ் செய்வதால் கிடைக்கும் பயன்களை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
பயன்கள்:
இந்த பேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்வதன் மூலம் முகம் வெள்ளையாகும், முகத்தில் உள்ள கரும்புள்ளி, கருவளையம், மூக்கின் ஓரத்தில் இருக்கும் கருமைகள், சரும வறட்சி போன்ற அனைத்தும் சரியாகிவிடும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
15 நாட்களில் கொட்டிய இடத்தில் முடி வளர இந்த ஹேர் பேக் மட்டும் போதும்..
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |