வீட்டில் இருந்தே முகத்தை அழகாக மாற்றும் கற்றாழை பவுடர்..! Aloe Vera Powder Uses..!
Aloe Vera Powder For Face: வணக்கம் தோழிகளே..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் முகத்தினை எப்போதும் பாதுகாப்பாகவும், அழகாகவும் மாற்றும் கற்றாழை பவுடர் எப்படி செய்யலாம் என்பதை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். நமது உடல் முழுவதையும் பாதுகாக்கக்கூடியது இந்த கற்றாழை. கற்றாழையில் பாக்டீரியா நுண்ணியிரியை எதிர்த்து போராடும் சக்தி உள்ளது. சோற்று கற்றாழையில் நீர்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் முகம் மற்றும் தலை முடியினை வறட்சி அடையாமல் பாதுகாத்து கொள்ளும்.
கற்றாழையில் அதிகமான வைட்டமின் சி, அமினோ அமில தன்மை இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். கற்றாழையில் இருக்கும் நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சரி செய்யும். கற்றாழையில் இருக்கும் ப்ரோடீன், தாதுக்கள், வைட்டமின் தலையின் வேர் பகுதிகளுக்கு மற்றும் சருமத்திற்கு எப்போதும் ஈரப்பதத்தினை கொடுக்கும். முக்கியமாக பெண்களுக்கு ஏற்படும் சரும பருக்கள், கரும்புள்ளிகளை கற்றாழை அகற்றிவிடும்.
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கற்றாழை அழகு குறிப்புகள்..! |
கற்றாழை பவுடர் – விளக்கம் 1:
முதலில் கற்றாழையின் ஒரு பகுதியை எடுத்து அதன் ஓர முட்பகுதிகளை நறுக்கிக்கொள்ளவும். அடுத்து இதனை பவுடர் செய்வதால் கற்றாழை மேல் உள்ள தோல் பகுதிகளை நீக்க வேண்டியதில்லை. அடுத்ததாக கற்றாழையை சிறிய துண்டுகளாக நறுக்கி பவுலில் போட்டுக்கொள்ளவும்.
கற்றாழை பவுடர் – விளக்கம் 2:
இப்போது பவுலில் நறுக்கி வைத்த கற்றாழையை அகலமான தட்டில் வைத்து கொள்ள வேண்டும். நறுக்கிய கற்றாழையை வெயிலில் 4 நாட்களுக்கு நன்றாக காயவைக்க வேண்டும்.
கற்றாழை பவுடர் – விளக்கம் 3:
வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்த கற்றாழையை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துவைத்து கொள்ளவும். அவ்ளோதாங்க முகத்தை பாதுகாக்கும் இயற்கையான கற்றாழை பவுடர் ரெடி. இந்த கற்றாழை பவுடரை 1 வருடம் வரையிலும் வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம். சருமம் அழகாக வேண்டுமென்றால் இயற்கையான முறையில் கற்றாழை பவுடர் ரெடி செய்து முகத்தில் அப்ளை செய்யலாம்.
முகத்தை ஜொலிக்க செய்யும் கற்றாழை பேஷியல்..! Aloe Vera Face Pack in Tamil |
இயற்கை அழகு குறிப்புகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tami |