Aloe Vera Skin Whitening Tips in Tamil..!
Aloe Vera Skin Whitening Tips in Tamil:- இயற்கையாக அழகை அதிகரிக்க இயற்கையே பல பொருள்களை அள்ளித்தந்திருக்கிறது. அந்த வகையில் சருமத்தை பளிச்சென்று மாற்ற கற்றாழை ஒரு சிறந்த பொருளாக விளங்குகிறது.
கற்றாழை ஆரோக்கியம் பிரச்சனைக்கு மட்டுமல்லாமல், அழகு சாதன பொருளாகவும் விளங்கிறது. கற்றாழையை பயன்படுத்தி பல வகையான அழகு சார்ந்த பிரச்சனைகளை சரி செய்யலாம்.
அதாவது உச்சி முதல் பாதம் வரை அழகுப்படுத்த சில கற்றாழை அழகு குறிப்பு டிப்ஸினை இங்கு படித்தறியலாம் வாங்க.
Aloe Vera Face Pack in Tamil..!
சருமம் பொலிவு பெற ஃபேஸ் பேக்:-
பொலிவற்ற சருமத்திற்கு கற்றாழையை பயன்படுத்தி ஃபேஸ் பேக் தயார் செய்யலாம் வாங்க. இதற்கு ஒரு சுத்தமான பவுல் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி, இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் பால் அல்லது ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இந்த கலவையை சருமத்தில் நன்றாக அப்ளை செய்ய வேண்டும். பிறகு 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை என்று தொடர்ந்து செய்து வர பொலிவற்ற சருமம் பளிச்சென்று பளபளக்கும்.
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கற்றாழை அழகு குறிப்புகள்..! |
புருவங்கள் பொலிவு பெற:-
கூந்தலைப் போன்று பலருக்கு புருவங்களும் வறண்டு பொலிவிழந்து காணப்படும். இதனால் கண்களின் அழகும் பொலிவிழந்து இருக்கும்.
கற்றாழை ஜெல்லை புருவங்களில் வைத்து மசாஜ் செய்வதன் மூலம் புருவம் அடர்த்தியாக வளரும்.
உதடுகளில் ஏற்படும் வெடிப்புகள் மறைய:-
உடலில் வறட்சி ஏற்படும் பொழுது உதடுகளில் வெடிப்புகள் உண்டாகும், இதனை தவிர்க்க கற்றாழை ஜெல்லை உதடுகளின் மீது தடவி மெதுவாக கீழிருந்து மேலாக மசாஜ் போல் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் உதடுகளில் ஏற்படும் வெடிப்புகள் மறைய ஆரம்பிக்கும், பிறகு தங்களுடைய உதடு வசீகரமாக காணப்படும்.
பளிச்சென்று சருமம் மாற ஃபேஸ் பேக்:-
வெயிலில் அலைந்து திரியும் பலருக்கு சருமம் கருமையாக காணப்படும். எனவே சருமம் பளிச்சென்று மாற ஃபேஸ் பேக் தயார் செய்யலாமா..? இதற்கு சுத்தமான பவுல் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு ஸ்பூன் கற்றாழை, 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
பிறகு சருமத்தில் அப்ளை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முக கருமை நீங்கி சருமம் பளிச்சென்று காணப்படும்.
மேலும் முகத்தில் தேவை இல்லாத இடங்களில் வளரும் முடிகள் உதிர்ந்து கொட்டிவிடும்.
இந்த ஃபேஸ் பேக்கினை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும். பிறகு வெது வெதுப்பான நீரில் சருமத்தை கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்தில் 2 அல்லது 3 முறை பயன்படுத்தலாம்.
தக்காளி பழத்தின் மகத்தான மருத்துவ பயன்கள்..! |
சருமத்தை ஜொலிக்கவைக்கும் ஃபேஸ் பேக்:-
இறுதியாக அனைவரது சருமத்திற்கும் ஏற்ற பேஸ் பேக் எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
இதற்கு இரண்டு ஸ்பூன் கேசரி பருப்பை 2 மணிநேரம் ஊறவைத்து எடுத்து கொள்ளுங்கள் அதனுடன் 1/2 அளவு உள்ள தக்காளி பழம் மற்றும் இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
இந்த ஃபேஸ் பேக்கினை முகத்தில் நன்றாக அப்ளை செய்ய வேண்டும். பிறகு 20 நிமிடங்கள் காத்திருந்து திரும்ப 5 நிமிடங்கள் மசாஜ் செய்து முகத்தை வெது வெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
இவ்வாறு வாரத்தில் 2 முறை செய்து வர சருமம் என்றும் ஜொலிஜொலிப்பாக காணப்படும்.
இயற்கை அழகு குறிப்புகள் (Aloe Vera Face Pack in amil) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tami |