சீக்கிரமா கலர் ஆகணுமா அப்போ இத ட்ரை பண்ணுங்க..! | Athimadhuram Benefits for Skin in Tamil

Advertisement

அதிமதுரம் அழகு குறிப்புகள் | Licorice Face Mask in Tamil for Skin Whitening 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அதிமதுரம் அழகு குறிப்புகள் (Athimathuram Powder For Face in Tamil) பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். சருமத்தின் நிறம் மங்கலாக இருப்பதற்கு வெயில், தூசி மற்றும் பல காரணங்கள் இருக்கலாம். அதற்காக சருமம் எப்படியோ போகட்டும் என்று விட்டு விட முடியாது அல்லவா. முகத்தின் நிறத்தை மேம்படுத்துவதற்கு இயற்கையான முறையில் பேஸ் பேக் போடுவது நல்லது. சருமத்தில் இழந்த பொழிவை மீட்பதற்கும், முகத்தை பளீச்சென்று வைத்து கொள்வதற்கும் அதிமதுரம் பேஸ் பேக் உங்களுக்கு உதவியாக இருக்கும். அந்த வகையில் நாம் இன்றைய அழகு குறிப்பு பகுதியில் அதிமதுரம் பேஸ் பேக் முகத்திற்கு எப்படி போடலாம் என்றும் அதனால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்வோம் வாங்க.

Athimathuram Powder Uses for Face:

தேவையான பொருட்கள்:

 1. அதிமதுர பொடி – 2 டேபிள் ஸ்பூன்
 2. கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
 3. தேன் – 1 டேபிள் ஸ்பூன்
 4. எலுமிச்சை சாறு – அரை டேபிள் ஸ்பூன்
 5. தண்ணீர் – சிறிதளவு

செய்முறை:

அதிமதுரம் அழகு குறிப்புகள்

 • Skin Maintenance Tips in Tamil: ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் அதிமதுர பொடி, 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் தேன், அரை டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
 • பின் இதை முகத்தில் தடவி 10-15 நிமிடம் காய வைக்கவும். இது உங்கள் முகத்தில் உள்ள Pigmentation, முகப்பரு போன்றவற்றை நீக்குவதற்கு உதவியாக இருக்கும். இதில் ஆண்டிபயாடிக் பண்புகள் இருப்பதால் சருமத்தை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.
சருமத்தை அழகாக்கும் ஆலிவ் ஆயில்

தேவையான பொருட்கள்:

 1. அதிமதுர பொடி – 2 டேபிள் ஸ்பூன்
 2. மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
 3. முல்தானி மெட்டி பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
 4. பால் அல்லது தயிர் அல்லது ரோஸ் வாட்டர் அல்லது தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

Athimathuram Powder for Face in Tamil

 • Athimathuram Powder for Face in Tamil: சுத்தமான பௌல் ஒன்றில் 2 டேபிள் ஸ்பூன் அதிமதுர பொடி, 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பவுடர் சேர்த்து மிக்ஸ் பண்ணவும். பின் அதில் பால் அல்லது தயிர் அல்லது ரோஸ் வாட்டர் அல்லது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ளவும்.
 • பின்னர் முகத்தை கழுவி விட்டு இந்த பேஸ் பேக்கை முகத்தில் தடவி அரை மணி நேரம் காயவைக்கவும். அரை மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவி விடலாம்.
 • இந்த டிப்ஸ் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவற்றை நீக்கி முகத்தை பொலிவாக வைத்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

அதிமதுரம் அழகு குறிப்புகள்:

Licorice Face Mask in Tamil for Skin Whitening

 • Athimathuram For Face in Tamil: அதிமதுரத்தை முகத்திற்கு உபயோகப்படுத்துவதால் அது சருமத்திற்கு நிறத்தை கொடுத்து இழந்த பொழிவை மீட்டு தருகிறது.
 • வறண்ட சருமம் உள்ளவர்கள் இதை பயன்படுத்துவதால் முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ளவும், முகச்சுருக்கம், வயதான தோற்றம் போன்றவற்றை தடுக்க உதவியாக இருக்கிறது.
 • அதிமதுரம் சருமத்திற்கு மட்டுமல்ல உடலுக்கும் பல விதமான நன்மைகளை தரக்கூடியது. அதிக அளவு மருத்துவத்தை கொண்டுள்ளதால் தான் இதற்கு அதிமதுரம் என்ற பெயர் வந்தது.
இந்த ஒரு எண்ணெய் போதும் உங்கள் சருமத்திற்கும், முடி வளர்ச்சிக்கும்

 

இயற்கை அழகு குறிப்புகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami
Advertisement