தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் வெள்ளை முடி கருப்பாக மாறிவிடும்

Advertisement

White Hair to Black Naturally Homemade Oil

முன்னடியெல்லாம் வயதானவர்களுக்கு இளநரை ஏற்படும். ஆனால் இப்போது அப்படியில்லை இளம் வயதினருக்கே நரைமுடி ஏற்படுகிறது. இளநரையாக இருந்தாலும் சரி, முதுமை நரையாக இருந்தாலும் கவலை வேண்டாம.! இத பதிவு உங்களுக்கானது தான்.! வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நரைமுடியை சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டு அதனை ட்ரை செய்து நரை முடியை கருப்பாக மாற்றுங்கள்.

நரை வராமல் இருக்க: 

உணவில் துரித உணவுகள் , வெள்ளை மாவில் செய்யப்பட்ட உணவுகள், காற்றூட்டப்பட்ட பானங்கள் மற்றும் சர்க்கரைகள் இருந்தால்,  ஆரோக்கியமான சருமம் அல்லது கூந்தலைப் பெற முடியாது.  B12, இரும்பு மற்றும் ஒமேகா 3 உள்ள உணவு அரிசி அவசியம். உங்கள் தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்காக தினசரி உணவில் மீன் மற்றும் கோழி, பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகள், தேங்காய் நீர், எலுமிச்சை சாறு,  அல்லது புதிய பழச்சாறுகளை போன்றவை சேர்க்க வேண்டும்.  

நமது வாழ்க்கையும் மன அழுத்தத்தால் நிறைந்துள்ளது . ஆனால் உங்கள் மனதை நிதானப்படுத்தவும் புத்துணர்ச்சி பெறவும் வழிகளைக் கண்டறிய வேண்டும். நீங்கள் இனிமையான இசையைக் கேட்கலாம், ஒரு பொழுதுபோக்கை எடுத்துக் கொள்ளலாம், தியானம்ம், உடற்பயிற்சி,  யோகா போன்றவை செய்யலாம். 

நரை முடியை சரி செய்ய:

இது தான் முடியின் ரகசியம்..! வாரம் ஒரு முறை மட்டும் ட்ரை பண்ணுங்க அப்புறம் பாருங்க உங்கள் முடி வளர்ச்சியை..!

நெல்லிக்காய் தூள்:

நரை முடியை சரி செய்ய

ஒரு இரும்பு கடாயை வைத்து அதில் நெல்லிக்காய் தூளை சேர்த்து வதக்கவும். பின் அதில் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி 20 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். முக்கியமாக கொதிக்கும் போது அடுப்பை குறைவான தீயிலே வைத்து கொதிக்க விடவும். இதை இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் வடிக்கட்டி சக்கை இல்லாமல் எடுத்து கொள்ளவும். இந்த ஆயிலை வாரத்திற்கு இரண்டு முறை தலையில் அப்ளை செய்து மசாஜ் செய்து குளிக்கவும். 

தேங்காய் எண்ணெய்:

நரை முடியை சரி செய்ய

தேங்காய் எண்ணெய் மற்றும் எலும்பிச்சை சாறு இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கை தலையில் அப்ளை செய்து மசாஜ் செய்யவும். இந்த பேக் காலத்திற்கும் உங்களின் முடியை கருமையாக வைத்திருக்க உதவுகிறது.

கருவேப்பிலை:

நரை முடியை சரி செய்ய

ஒரு மிக்சி ஜாரில் கருவேப்பிலை, 2 தேக்கரண்டி நெல்லிக்காய் தூள் சேர்த்து அரைக்கவும். இந்த பேக்கை தலையில்  அப்ளை செய்து 1 மணி நேரம் வைத்திருந்தது பிறகு ஷாம்பை பயன்படுத்தி தலையை அலசவும்.

மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதவாது ஒன்றை தொடர்ந்து பயன்படுத்தினாலே வெள்ளை முடி கருமையாக மாறிவிடும்.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

இந்த ஐந்தில் எதாவது ஒன்றை பயன்படுத்தினாலே முகப்பருக்கள் மறைந்து விடும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement