இது தான் முடியின் ரகசியம்..! வாரம் ஒரு முறை மட்டும் ட்ரை பண்ணுங்க அப்புறம் பாருங்க உங்கள் முடி வளர்ச்சியை..!

Hair Growth Treatment Natural in Tamil

Hair Growth Treatment Natural in Tamil

தலை முடி என்னதான் வளர்ந்தாலும் அதே அளவு கொட்டிக்கொண்டு தான் உள்ளது. அதற்கு என்னதான் தீர்வு என்று தினமும் போன் மூலம் தேடிக்கொண்டு தான் இருக்கிறோம். இதை தவிர நண்பர்கள் சொல்வது விளம்பரத்தின் மூலம் தெரிந்துகொள்வது என்று அனைத்தையுமே ட்ரை பண்ணிக்கொண்டு தான் இருக்கிறோம். அப்படி இருந்தும் தலை முடி மீண்டும் கொட்டிக்கொண்டு தான் உள்ளது.

நாம் செய்யும் சில தவறுகள் தான் தலைமுடி கொட்டுவதற்கு பெரிய காரணமாக உள்ளது. இன்று இந்த பதிவு வாயிலாக இயற்கை முறையில் முடி கொட்டுவதை நிறுத்தி தலை முடி வளர்வதற்கு ஹேர் பேக் போடுவோம் வாங்க..!

Hair Growth Treatment Natural in Tamil:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

நாம் செய்யும் தவறுகள் என்ன தெரியுமா தலை குளிக்கும் போது தலையின் எண்ணெய் இல்லாமல் வைத்துக்கொள்வது.

அடுத்து நிறைய ஷாம்பு மற்றும் எண்ணெய் பொருட்களை தலையில் மாற்றி மாற்றி பயன்படுத்த கூடாது.

வாரத்திற்கு 3 நாட்கள் தலைகுளிப்பது அவசியம். அதேபோல் தலையில் எண்ணெய் இல்லாமல் வைக்கக்கூடாது. மேலும் தலையில் அழுக்கு இல்லாமலும் பார்த்து கொள்ள வேண்டும். சரி வாங்க இப்போது ஒரு அற்புதமான ஹேர் பேக் பற்றி தெரிந்து கொள்வோம்..!

ஒரு வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இதை செய்தால் புதுமுடி வளர Help பண்ணும்..!

Hair Growth Treatment Natural in Tamil: 

குறிப்பு:- முதல் நாள் இரவே 2 டேபிள் ஸ்பூன் ஆளிவிதையை 2 டம்ளர் தண்ணீரில் ஊறவைக்கவும்.

Hair Growth Treatment Natural in Tamil

முதலில் பீட்ரூட் தோல் சீவி எடுத்துக் கொள்ளவும், அடுத்து அதனை துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

Hair Growth Treatment Natural in Tamil

அடுத்த வடித்த சாதம் அப்படி இல்லையென்றால் 3 டேபிள் ஸ்பூன் அரிசி எடுத்து கடாயில் போட்டு 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். ஓரளவு வெந்தவுடன் சாதத்தை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளவும்.

Hair Growth Treatment Natural in Tamil

மிக்சி ஜாரை எடுத்துக் கொள்ளவும். அதில் நாம் நறுக்கி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அரைத்த தண்ணீரை அப்படியே வைத்துவிடவும்.

மிக்சி ஜாரில் வடித்து வைத்துள்ள சாதத்தை எடுத்து கொள்ளவும். அதில் அரைத்து வைத்துள்ள பீட்ரூட்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இப்போது அரைத்து வைவ்த்துள்ளதை தனியாக எடுத்துக்கொள்ளவும்.

முதல் நாள் இரவே ஊறவைத்த ஆளி விதையை பார்த்தால் அது ஊறி ஜெல் மாதிரி இருக்கும். அதனை அப்படியே வடிகட்டி அந்த ஜெல்லை அரைத்த அரிசியில் போட்டுக் கொள்ளவும். இப்போது அற்புதமான ஹேர் பேக் ரெடி.

இதை உங்கள் முடிக்கு அப்ளை செய்து 20 நிமிடம் வைத்திருந்து பின் நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது சீயக்காய் சேர்த்து அலசி கொள்ளவும்.

இதையும் ட்ரை செய்யுங்கள் 👉👉👉 போதும் போதும் என்று சொல்ற அளவுக்கு முடி வளர வேண்டுமா..? அப்போ இந்த எண்ணெயை தடவுங்க..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil