In 2 Days – Remove Dark Spots And Scars
பொதுவாக எல்லாருக்கும் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று முகப்பரு. இந்த முகப்பரு நாளடைவில் கருப்புள்ளிகளாகவும், பள்ளங்களாகவும் மாறி முகத்தை அசிங்கமாக மாற்றுகின்றன. இதனை சரி செய்வதற்காக கடையில் விற்கும் பொருட்களை பயன்படுத்தி ரிசல்ட்டை கொடுத்தாலும் நாளடைவில் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும். அதனால் இயற்கையாக கிடைக்க கூடிய பொருட்களை பயன்படுத்தி அழகுபடுத்தினால் எந்த பிரச்சனையும் இல்லை. இன்றைய பதிவில் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை எப்படி நீக்குவது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி 2 நாட்களில் கரும்புள்ளியை நீக்குவது எப்படி.?
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
கற்றாழை ஜெல்:
கற்றாழையில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளதால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க உதவுகிறது.
ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல் 1 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு சிறிதளவு, 1 தேக்கரண்டி சந்தன தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தடவி காய்ந்ததும் முகத்தை கழுவ வேண்டும்.
பால்:
வைட்டமின் பி, கால்சியம், ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் மற்றும் சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் அனைத்தும் பச்சை பாலில் இருக்கின்றது. இதனால் முகப்பரு, சுருக்கங்கள் போன்றவையே சரி செய்கிறது. மேலும் 2 நாட்களில் முகத்தில் உலா கரும்புள்ளிகளை நீக்க உதவுகிறது.
எப்படி பயன்படுத்துவது.?
ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி பச்சை பால், 1/2 தேக்கரண்டி முல்தானி மெட்டி சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
பாலை முகத்தில் இப்படி அப்ளை செய்தால் இவ்வளவு அதிசயம் நடக்குமா.!
தக்காளி:
தக்காளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துரைப்பதால் சருமத்தை உள்ள பள்ளங்களை நீக்கி, சருமத்தை பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.
எப்படி பயன்படுத்துவது.?
தக்காளியில் உள்ள சாற்றை மட்டும் எடுத்து முகத்தில் அப்ளை செய்து 10 நிமிட வைத்திருந்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
மஞ்சள்:
மஞ்சளில் ஆண்டிமைக்ரோபியல், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருக்கிறது. இவை கரும்புள்ளிகளை நீக்குகிறது, சரும நிறத்தை மேம்படுத்துவதற்கும் , சுருக்கங்களை குறைப்பதற்கும், சருமத்தை பளபளப்பாக வைத்து கொள்ளவும் உதுவுகிறது.எப்படி பயன்படுத்துவது.?
ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1/2 தேக்கரண்டி பால், 1 தேக்கரண்டி எலும்பிச்சை சாறு சேர்த்து பேஸ்ட்டாக கலக்கவும். இந்த பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பிறகு கழுவ வேண்டும். 2 நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
உருளைக்கிழங்கு:
வைட்டமின் பி6, பொட்டாசியம், துத்தநாகம், வைட்டமின் சி மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை உருளைக்கிழங்கில் இருக்கின்றது. இவை சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை உருவாக்குகிறது.
எப்படி பயன்படுத்துவது.?
உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக கட் செய்து கொள்ளவும். இந்த துண்டுகளை முகத்தில் வைத்து எடுக்கவும். இதை 2 நாட்களுக்கு பயன்படுத்தினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீங்கி விடும்.
சருமம் எப்போதும் அழகாகவும் பளபளப்பாகவும் இருக்க இந்த Home Rremedy ட்ரை பண்ணுங்க ..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |