கரி சோப்பு பயன்கள் தமிழில் | Charcoal Benefits For Skin in Tamil
முகத்தை அழகாக வைத்து கொள்வதற்காக நாம் இப்போதெல்லாம் வீட்டிலேயே இயற்கை முறையில் ஃபேஸ் பேக், ஃபேஸ் வாஷ், குளியல் பவுடர், ஷாம்பு, சோப் என தயாரித்து வருகிறோம். அப்படி தயாரிக்கும் பொருளில் ஒன்று தான் இந்த கரி சோப். இந்த கரி சோப்பை முகத்திற்கு பயன்படுத்துவதால் முகத்திற்கு என்ன நன்மைகள் கிடைக்கின்றன, அதை எப்படி வீட்டிலேயே தயாரிப்பது போன்ற பல தகவல்களை இந்த தொகுப்பில் படித்தறியலாம் வாங்க.
Charcoal Uses in Tamil – கரி சோப்பு:
- இந்த சோப்பை முகத்திற்கு பயன்படுத்துவதால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி முகம் அழகு பெறும். கரித்தூள் முகத்தில் இருக்கும் எண்ணெய்களை உறிஞ்சுவதால் சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ள உதவுவது மட்டுமின்றி பருக்கள் வராமல் தடுக்கவும், முகத்தில் இருக்கும் பருக்களை சரி செய்யவும் உதவுகிறது.
- சருமம் மற்றும் முகத்தில் இருக்கும் பள்ளங்களை சரி செய்யும். கோடை காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை சரி செய்கிறது.
- கரும்புள்ளிகள், சொரியாசிஸ் போன்றவற்றை குணப்படுத்துகிறது. Anti Aging Properties இருப்பதால் சருமத்தை இளமையாக வைத்து கொள்ள உதவுகிறது. சரும சுருக்கங்களை சரி செய்ய உதவுகிறது.
- சருமத்தை பொலிவாக வைத்து கொள்ளவும், சருமத்தில் வேறு எந்த விதமான பிரச்சனைகள் வராமல் பார்த்து கொள்ளும் ஒரு பாதுகாப்பு பொருளாக இந்த கரி சோப் உள்ளது.
- சருமத்திற்கு நாம் அடிக்கடி பயன்படுத்தும் அழகு சாதனங்களில் ஒன்று சோப். சோப்பு கட்டிகள் முகத்தில் Ph அளவை சரியான அளவில் வைத்து கொள்ள பயன்படுகிறது.
தேவையான பொருட்கள் – Charcoal Soap Benefits in Tamil:
- Charcoal Soap Base அல்லது கிளிசரின் சோப்பு கட்டி – தேவையான அளவு
- வைட்டமின் இ மாத்திரை – 1
- கரித்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை – கரி சோப்பு நன்மைகள்:
ஸ்டேப்: 1
Charcoal Soap Base அல்லது கிளிசரின் சோப்பு கட்டி எடுத்து கொள்ளவும். பின் அதை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
ஸ்டேப்: 2
சிறிய துண்டுகளை பௌலில் எடுத்து கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணி வைத்து அதன் மேல் இந்த Bowl-ஐ வைத்து (Double Boiling) மெல்ட் செய்யவும்.
ஸ்டேப்: 3
Charcoal Soap Benefits for Face in Tamil: முழுவதும் மெல்ட் ஆன பிறகு சிறிதளவு கரித்தூள் சேர்க்கவும் (கரித்தூளை கவனமாக தேர்ந்தெடுக்கவும்). பின் வைட்டமின் இ மாத்திரை சேர்த்து கிளறி விடவும். பின் இதை சோப் மோல்ட் அல்லது பிளாஸ்டிக் கப்பில் சேர்க்கவும், உங்களுக்கு வாசனை தேவை எனில் வாசனை எண்ணெய் ஊற்றிக்கொள்ளலாம்.
ஸ்டேப்: 4
Charcoal Soap Benefits in Tamil: சோப் கட்டியாகும் வரை சோப்பு மோல்டில் காய வைக்கவும். சோப் கட்டியானதும் சோப்பு கட்டிகளை வெளியே எடுக்கவும். இப்போது அசத்தலான கரி சோப் தயார்.
ஒரே இரவில் முகம் வெள்ளையாக மாற்றும் கரித்தூள்கள் |
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |