1 பொருள் போதும் முகத்திற்கு மூன்று விதமாக பயன்படுத்தி முகத்தை இளமையாக வைக்கலாம்…!

Advertisement

Curd Face Pack at Home in Tamil

பெண்கள் எப்போதும் முகத்திற்கு எதாவது ட்ரை செய்து கொண்டு இருப்பார்கள். அதில் சிலர் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முகத்தில் இருக்கும் பருக்களை நீக்குதல் மற்றும் முகத்தை பளபளப்பாக வைக்க செய்தல் என்று நிறைய பயன்படுத்தி கொண்டே இருப்பார்கள். ஆனால் ஒரு சிலருக்கு இது மாதிரி வீட்டில் இருந்து Face Pack பயன்படுத்துவது பிடிக்காது. ஆனால் இன்றைய பதிவில் சொல்லப்பட்டுள்ள இந்த ஒரு Face Pack– கை முகத்திற்கு மட்டும் பயன்படுத்தி பாருங்கள் நீங்களே வியந்து போவீர்கள். ஒரே ஒரு பொருளை வைத்து முகத்திற்கு மூன்று விதமாக பயன்படுத்தலாமா என்று உங்களுக்கே புதுசா இருக்கும். சரி வாருங்கள் அப்படி என்ன Face Pack என்று பதிவை முழுவதுமாக படித்து தெரிந்துக்கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

முகத்தில் உள்ள பருக்கள் நீங்க:

remove face pimples naturally in tamil

 தயிரில் வைட்டமின் D, புரோட்டீன், பாக்டீரியா மற்றும் லாக்டிக் ஆசிட் போன்ற சத்துக்கள் இருப்பதால் இது முகத்தில் இருக்கும் பருக்களை நீக்கி முகம் என்றும் பளபளப்பாக இருக்க செய்கிறது. 

முதலில் பருக்கள் நீங்க என்ன செய்வது என்று தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

  • தயிர்- 2 தேக்கரண்டி 
  • கஸ்தூரி மஞ்சள்- 1 தேக்கரண்டி 

அப்ளை செய்யும் முறை:

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் 2 தேக்கரண்டி தயிர் மற்றும் 1 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு அதனை முகத்தில் நன்றாக அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள்.

இது மாதிரி தினமும் செய்து வந்தால் போதும் மஞ்சள் நமது முகத்தில் இருக்கும் கிருமிகளை அழித்து பருக்கள் அனைத்தையும் நீக்கிவிடும்.

முகம் பளபளப்பாக இருக்க: 

mugam palapalakka enna seivathu

அடுத்து முகத்தை பளபளப்பாக வைப்பதற்கு முகத்திற்கு தயிரினை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கப்போகிறோம்.

தேவையான பொருட்கள்:

  1. கடலை மாவு- 1 தேக்கரண்டி 
  2. தயிர்- 2 தேக்கரண்டி 

அப்ளை செய்யும் முறை:

ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துள்ள பொருட்களை போட்டு நன்றாக கலந்து விடுங்கள். அதன் பிறகு கலந்து வைத்துள்ள Face Pack- கை முகத்தில் அனைத்து இடங்களிலும் அப்ளை செய்து விட்டு 5 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள்.

இதனை நீங்கள் தினமும் செய்தால் போதும் உங்களுடைய முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி முகத்தை 24 மணி நேரமும் பளபளப்பாக இருக்க செய்யும். 

இதையும் படியுங்கள்⇒ தலையில் கை வைச்சாலே முடி கொட்டுதா…! அப்போ இனிமேல் இதை Follow பண்ணுங்க..!

முகத்தில் சுருக்கம் மறைய:

என்றும் இளமையாக இருக்க

தக்காளியை நாம் முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் இருக்கும் கருமை மற்றும் முகத்தில் சுருக்கம் இந்த இரண்டு பிரச்சனையும் நீங்கிவிடும். அதனை தயிருடன் சேர்த்து எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துக்கொள்வோம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • தயிர்- 1 தேக்கரண்டி 
  • அரிசி மாவு- 1/2 தேக்கரண்டி 
  • தக்காளி சாறு- 1 தேக்கரண்டி 

இப்போது ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதன் பின்பு தயார் செய்து வைத்துள்ள Face Pack– கை முகத்தில் அப்ளை செய்து 5 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.

5 நிமிடம் கழித்த பிறகு முகத்தை வழக்கம் போல் கழுவி விடுங்கள். இதை மட்டும் செய்தால் போதும் முகத்தில் இருக்கும் கருமை மற்றும் முகச்சுருக்கம் நீங்கி என்றும் இளமையாக அப்படியே இருப்பீர்கள். 

இதையும் படியுங்கள்⇒ இந்த 3 பொருள் போதும் தலை முடி உடைவதையும் தடுக்கும், மேலும் தலை முடி அடர்த்தியாகவும், நீளமாக வளர உதவி செய்யும்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement