Does Applying Egg Cause White Hair
இன்றைய கால கட்டத்தில் இளம் வயதினருக்கே நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது. இளம் வயதினருக்கு வெள்ளை முடி ஏற்படுவதற்கு ஒரு சிலருக்கு ஜீன் வகை இருந்தாலும், இன்னும் சிலருக்கு மன அழுத்தம், உணவு முறை, தூக்கமின்மை போன்ற காரணங்களினால் நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது. இதனை மறைப்பதற்கு கடையில் விற்கும் ஹேர் டையை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் வீட்டிலையே ஹேர் டை தயாரித்து நரை முடியை கருப்பாக மாற்றுவதற்கான குறிப்பை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..
முட்டையை வைத்து வெள்ளை முடியை கருப்பாக மாற்றுவது எப்படி.?
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் டீயை தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிக்கட்டி சாற்றை மற்றும் எடுத்து கொள்ளவும்.
அடுத்து ஒரு முட்டை, நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு, பாதி எலுமிச்சை பழம், ஆமணக்கு போன்றவை இந்த ஹேர் செய்வதற்கு தேவைப்படும்.
முட்டையில் புரத சத்து இருப்பதால் முடி பிரச்சனைக்கு சிறந்த தீர்வை கொடுக்கும். எலுமிச்சை பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடல் சூட்டை தனித்து, முடி உதிர்வை நிறுத்துவதற்கும், வெள்ளை முடி வராமலும் தடுக்கும்.ஹேர் பேக் செய்வதற்கு செய்து வைத்துள்ள டீ டிகாஷனில் ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் எடுத்து கொள்ளவும், அதனுடன் நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு ஒன்று, பாதி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். அதனுடன் ஆமணக்கு எண்ணெய் 2 தேக்கரண்டி சேர்த்து கலந்து கொள்ளவும்.
இந்த பேக்கை தலையில் தடவி 30 நிமிடம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும். மேலும் இதனை வாரத்திற்கு இரண்டு முறை என்று தொடர்ந்து அப்ளை செய்து வந்தால் வெள்ளை முடி கருப்பாக மாறிவிடும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |