முகத்தின் அழகு குறிப்புகள்
வணக்கம் நண்பர்களே இன்று நம் அழகு குறிப்பு பதிவில் பெண்களின் அழகை மேம்படுத்த அருமையான குறிப்பு தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாக பெண்களுக்கு பண்டிகை காலங்கள் வந்தாலே ஆடை, அலங்கார பொருட்கள் என்று அதில் அதிகமான விருப்பத்தை கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு அதை விட முகத்தின் அழகை அதிகமாக விரும்புவார்கள். அந்த வகையில் வீட்டில் இருக்கும் பெண்ணாக இருந்தாலும் சரி அல்லது வேலைக்கு செல்லும் பெண்ணாக இருந்தாலும் சரி, இவர்களின் முகம் அதிகம் வேலை செய்து சருமங்கள் பாதித்தது போல இருக்கும். பண்டிகை காலங்களில் இவர்களின் முகத்தை மேலும் அழகாக்க என்ன செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இளமையான தோற்றத்தை பெறுவதற்கு இந்த ஒரு பொருள் இருந்தால் மட்டும் போதும் |
சரும பராமரிப்பு குறிப்புகள் | Face Care Tips in Tamil
- உங்களுடைய சருமத்தை நீங்கள் இயற்கை முறையில் அழகுபடுத்த வேண்டும் என்று நினைத்தால் தினமும் குறைந்தது 10 கிளாஸ் வரையும் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
- தினமும் அதிகமாக தண்ணீர் குடிப்பதால் உங்கள் சருமத்தில் இருக்கும் அழுக்குகளை சுத்தப்படுத்தி,டோனிங் செய்து ஈரப்பதத்துடன் வைத்திருப்பதற்கு உதவியாக இருக்கிறது. எனவே தண்ணீர் அதிகமாக குடிப்பது நல்லது.
- பெண்கள் பொதுவாக வெளி இடங்களுக்கு செல்லும் பொழுது எதாவது கிரீம் பயன்படுத்துவது நல்லது. கிரீம் பயன்படுத்தும் பொழுது அவை உங்களின் சருமங்களை சூரிய ஒளிகளில் இருந்து பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு உதவியாக இருக்கிறது.
- தினமும் காலை எழுந்தவுடன் உடல் வேர்க்கும் அளவிற்கு உடல் பயிற்சி செய்வது மிகவும் அவசியம். இதனால் முகத்தின் அழகு நாளுக்கு நாள் அழகாக செய்யும்.
- பொதுவாக வேலைக்கு செல்லும் பெண்கள் அசதியில் முகத்தை சுத்தம் செய்யாமல் உறங்கிவிடுவார்கள். இதனால் சருமங்கள் அதிக அளவில் பாதிப்பு அடைய செய்கிறது. எனவே மேக்கப்பை முழுவதுமாக சுத்தம் செய்துவிட்டு உறங்குவது நல்லது.
- மேலும் சருமத்தை பண்டிகை நாட்களில் அழகாக்க ஓரு அருமையான குறிப்பை தெரிந்துகொள்வோம்.
முகம் பொலிவு பெற:
உங்கள் முகத்தில் இருக்க கூடிய கருமை, முகப்பருக்கள் போன்ற எல்லாவிதமான சரும பிரச்சனைகளும் ஒரே இரவில் மறைந்து முகத்தை மேலும் அழகுப்படுத்த இந்த ஒரு கிரீம் இருந்தால் மட்டுமே போதும், அவற்றை எப்படி எளிய முறையில் தயாரிப்பது என்று தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்:
- பச்சரிசி- சருமத்திற்கு தேவையான அளவு
- பீட்ருட்-1
- தக்காளி -1
செய்முறை:
- முதலில் பச்சரிசியை தண்ணீரில் மூன்று முறை சுத்தம் செய்துகொள்ள வேண்டும். சுத்தம் செய்த பிறகு அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
- அரிசி ஊறவைத்த பிறகு பீட்ருட் எடுத்துக்கொண்டு அதை சீவி ஜூஸ் செய்துகொள்ள வேண்டும்.
- அடுத்தாக ஊறிய அரிசியை எடுத்துக்கொண்டு அதை மிக்ஸி ஜாரில் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த அரிசியை ஒரு காட்டன் துணியில் ஊற்றி வடிகட்டி கொள்ள வேண்டும்.
- அடுத்ததாக ஒரு கடாயை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் வடிகட்டி எடுத்து வைத்த அரிசியை அதில் சேர்த்து கலந்துவிட வேண்டும். கொஞ்சம் கெட்டி பதம் வந்ததும் பீட்ருட் சாற்றை அதில் கலந்து கிண்டி கொண்டே இருக்கவேண்டும். கிரீம் பதம் வரும் வரை கிண்டி விட வேண்டும்.
- கிரீம் ரெடி ஆனதும் ஒரு கிணத்தில் எடுத்து வைத்துக்கொண்டு அதில் தக்காளி சாற்றை சேர்த்து குளிப்பதற்கு முன்பு சருமங்களில் பூசிக்கொண்டு குளித்து வர வேண்டும். உங்களுக்கு தக்காளி வேணாம் என்றால் தேன், கற்றாழை, ரோஸ் வாட்டர் போன்றவற்றையும் கலந்துகொள்ளலாம்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |