வெறும் 5 நிமிடத்தில் முகத்தில் இருக்கும் அழுக்கினை வெளியேற்றி முகத்தை பளிச்சென்று வைக்க இது மட்டும் போதும்..!

Advertisement

Face Brightening Home Remedies | முகம் பளிச்சென்று இருக்க என்ன செய்ய வேண்டும் 

பொதுவாக பெண்கள் அனைவரும் ஒரு இடத்திற்கு வெளியில் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் போதும். குறிப்பாக 1 மணிநேரத்திற்கும் முன்பாக கிளம்ப ஆரம்பித்து விடுவோம். அதுமட்டும் இல்லாமல் முகத்திற்கு என்று தனி நேரம் ஒதுக்கி என்ன என்னவோ செய்வார்கள். அதிலும் சிலர் முகத்தை எப்படியாவது பளிச்சென்று மாற்ற வேண்டும் என்று Face பேக், கிரீம் மற்றும் பவுடர் போன்றவற்றினை உபயோகப்படுத்துவார்கள். ஆனால் இவற்றில் எல்லாம் முழுமையான பலன்கள் கிடைக்குமா என்று கேட்டால் அது தான் கொஞ்சம் யோசனையாக உள்ளது. அந்த வகையில் இன்றைய அழகுக்குறிப்பு பதிவில் முகத்தில் இருக்கும் அழுக்கினை நீக்கி முகத்தை எப்போதும் பளிச்சென்று வைக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். ஆகையால் பதிவினை தெளிவாக படுத்து அவற்றினை ட்ரை செய்து பார்க்கலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முகத்தில் அழுக்கு வரக் காரணம்: 

 நம்முடைய முகத்திற்கு அடியில் உள்ள தோல்களில் காணப்படும் சுரப்பிகளால் எண்ணெயானது சுரக்கப்டுகிறது. இது தான் முகத்தில் எண்ணெய் பசை வருவதற்கான காரணமாக உள்ளது. இவ்வாறு எண்ணெய் பசை வருவதன் விளைவாக சூரியன் ஒளியில் இருந்து படும் வெளிச்சம் மற்றும் தூசு ஆகியவற்றை தான் காலப்போக்கில் முகத்தில் மற்றும் உடம்பில் அழுக்குகளாக ம் மாறுகிறது. 

முகம் பளிச்சென்று இருக்க:

முகத்தில் இருக்கும் அழுக்கினை போக்கி முகம் பளிச்சென்று இருக்க கீழே இரண்டு விதமான குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு குறிப்பில் ஏதேனும் ஒன்றினை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

குறிப்பு- 1

 முகம் பளிச்சென்று இருக்க

 

முதலில் 1 ஸ்பூன் காபித்தூள் மற்றும் 1 ஸ்பூன் சர்க்கரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு பவுலில் இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து நன்றாக 2 நிமிடம் கலந்து கொள்ள வேண்டும்.

2 நிமிடம் கழித்த பிறகு அதனுடன் 6 சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்து மீண்டும் ஒரு 5 நிமிடம் கலந்து கொள்ள வேண்டும்.

இப்போது தயார் செய்து வைத்துள்ள Face பேக்கினை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விடுங்கள். இவ்வாறு நீங்கள் வாரம் 3 முறை செய்வதன் மூலமாக காபி தூளில் உள்ள ஆன்டி ஆக்ஸைடு மற்றும் வைட்டமின்கள் முகத்தில் பருக்கள் மற்றும் எண்ணெய் பசை வராமல் செய்து முகத்தை பளிச்சென்று வைக்க உதவும்.

மலை பாம்பு போல் நீளமாக முடி வளர வேண்டுமா..  அப்போ வாரத்திற்கு 1 முறை இதை செய்தால் போதும்.. 

குறிப்பு- 2

 முகத்தில் உள்ள அழுக்கை நீக்குவது எப்படி

இரண்டாவதாக சொல்லப்பட்டுள்ள Face பேக்கினை தயார் செய்வதற்கு முதலில் 1 ஸ்பூன் கடலை மாவு மற்றும் 1 ஸ்பூன் தயிரினை ஒரு பவுலில் எடுத்துக்கொண்டு அதனை சிறிது நேரம் கலந்துக்கொள்ள வேண்டும்.

சிறிது நேரம் கழித்த பிறகு பவுலில் உள்ள பொருளுடன் 5 சொட்டு வேப்ப எண்ணெய் சேர்த்து மீண்டும் ஒரு முறை கலந்து கொள்ள வேண்டும். இப்போது இந்த Face பேக்கினை அப்ளை செய்து முகத்தை 10 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும்.

இவ்வாறு நீங்கள் செய்வதன் மூலமாக முகத்தில் பாக்டீரியா தொற்று எதுவும் வராமல் இருக்கச் செய்து பளிச்சென்று இருக்க செய்கிறது. (குறிப்பு: முகத்தில் அலர்ஜி தன்மை உடையவர்கள் இந்த இரண்டு Face பேக்கினை உபயோகப்படுத்த வேண்டாம்)

பத்தே நாட்களில் உங்க முடி கிடுகிடுன்னு வளர இந்த 2 பொருள் மட்டும் போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement