பொலிவு இழந்த முகத்தை பளிச்சென்று வைப்பதற்கு 5 நிமிடம் போதும்…!

Advertisement

முகம் பொலிவு அழகு குறிப்புகள்

ஹாய் நண்பர்களே..! அனைவருக்கும் தன்னுடைய முகம் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக பெண்கள் முகத்தை அழகு படுத்துவதற்கு என்று தனி நேரத்தை செலவிடுகின்றனர். அது மட்டும் இல்லாமல் பார்லருக்கு சென்றும் முகத்திற்கு மேலும் அழகு சேர்க்கின்றனர். இனி நீங்கள் இது மாதிரி செலவு செய்யாமல் முகத்தை அழகாக வைப்பதற்கு என்று தனி நேரத்தையும் ஒதுக்காமல் வீட்டில் இருந்த படியே வெறும் 5 நிமிடத்தில் நீங்கள் எதிர்பார்க்காத முக அழகை பெறுவது எப்படி என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க…!

இதையும் படியுங்கள்⇒ வெளியூர் செல்லுவதற்கு முன் இதை செய்யுங்கள் உங்கள்             முகம் பொலிவாகவே இருக்கும்..!

முகம் அழகு பெற டிப்ஸ்:

உங்களுடைய முகம் அழகு பெறுவதற்கு இரண்டு விதமான டிப்ஸ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

டிப்ஸ்- 1

தேவையான பொருட்கள்:

  • உருளைகிழங்கு சாறு – 5 ஸ்பூன் 
  • கஸ்தூரி மஞ்சள்- 1/4 ஸ்பூன் 
  • கடலை மாவு – ஒரு ஸ்பூன் 

செய்முறை:

முதலில் நீங்கள் உருளைக்கிழங்கை எடுத்துக்கொண்டு அதன் மேல் உள்ள தோலை சீவி விடுங்கள். தோல் சீவிய கிழங்கை கேரட் துருவல் போல் துருவி தனியாக வைத்து கொள்ளுங்கள்.

இப்போது துருவி வைத்துள்ள கிழங்கை உங்களுடைய கைகளால் பிசைந்து அதில் இருந்து 5 ஸ்பூன் அளவு சாறு எடுத்து கொள்ளுங்கள்.

கடைசியாக இந்த சாறுடன் எடுத்து வைத்துள்ள கஸ்தூரி மஞ்சள் மற்றும் கடலை சேர்த்து நன்றாக கலந்து அந்த பேஸ்டை உங்களுடைய முகத்தில் மசாஜ் செய்து விடுங்கள்.

ஒரு 10 முதல் 15 நிமிடம் உங்களுடைய முகத்தில் அந்த பேஸ்டை அப்படியே வைத்து விட்டு அதன் பிறகு குளித்து விடுங்கள். இது மாதிரி நீங்கள் வாரம் ஒரு முறை செய்தால் போதும் உங்கள் முகம் அழகான பொலிவுடன் காணப்படும்.

காசு கொடுத்து பேஷியல் செய்வதை விட இந்த பேஷியல் செய்தால் முகம் பிரகாசமாக இருக்கும் ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க.!

டிப்ஸ்- 2

தேவையான பொருட்கள்:

  • கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன் 
  • கஸ்தூரி மஞ்சள்- 1/2 ஸ்பூன் 
  • பசும் பால் – இரண்டு ஸ்பூன் 
  • சந்தனம் – 1/2 ஸ்பூன் 

செய்முறை:

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் 1/2 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், 2 ஸ்பூன் கற்றாழை ஜெல், 2 ஸ்பூன் பசும் பால் மற்றும் 1/2 ஸ்பூன் சந்தனம்  இந்த ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளுங்கள்.

இப்போது உங்களுடைய முகத்தை ஒரு முறை சுத்தமாக கழுவிய பிறகு தயார் செய்த பேஸ்டை முகத்தில் தடவி மசாஜ் செய்து விடுங்கள்.

அதன் பிறகு 20 நிமிடம் களித்து உங்களுடைய முகத்தை கழுவி விடுங்கள். அதன் பிறகு பார்த்தால் நீங்களே எதிர்பார்க்காத அளவிற்கு உங்களுடைய முகம் அழகில் பளபளக்கும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 
Advertisement