முகம் பட்டுப்போல் ஜொலிக்க பேஷியல்..! Naturally Face Whitening Tips at Home in Tamil..!

Advertisement

முகம் பட்டுப்போல் ஜொலிக்க பேஷியல்..! Naturally Face Whitening Tips at Home in Tamil..!

Face Whitening Tips at Home Naturally in Tamil:– வணக்கம் தோழிகளே..! இன்று நாம் பெண்கள் வீட்டில் இருந்து செய்ய கூடிய எளிய பேஷியல் சிலவற்றை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். இயற்கையான முறையில் முகத்திற்கு பேஷியல் செய்யும் பொழுது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் அகன்று, சருமத்திற்கு புத்துயிர் அளிக்கும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், சரும வறட்சி, சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி சருமம் என்றும் பட்டுபோல் ஜொலிக்கும். இயற்கை முறையில் சருமத்தை பராமரிக்கும்பொழுது சருமத்திற்கு எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. சரி வாங்க இயற்கையான முறையில் சரும அழகை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

உச்சி முதல் பாதம் வரை சருமம் வெள்ளையாக இந்த டிப்ஸ் பாலோ

Face Whitening Tips at Home Naturally in Tamil

சரும வறட்சி நீங்க – Dry skin tips in tamil:

பொதுவாக பலரும் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தான் சரும வறட்சி. இந்த சரும வறட்சி நீங்க நம் சமையலறையில் உள்ள கடலைமாவு பயன்படுகிறது. கடலை மாவு சரும வறட்சியை நீக்குவதுடன் சருமத்தை சாப்டாக வைத்து கொள்ளும்.

எனவே ஒரு சுத்தமான பவுல் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு ஸ்பூன் கடலை மாவு, 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பிறகு சருமத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 5 முதல் 10 நிமிடங்கள் காத்திருந்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்தில் 2 அல்லது 3 முறை செய்து வர சரும வறட்சி நீங்கும்.

முகம் பொலிவு பெற – Skin whitening tips in tamil:

புதினா சருமத்தை என்றும் பொலிவுடன் வைத்து கொள்ள மிகவும் பயன்படுகிறது. மேலும் சருமத்தில் உள்ள கருமையை நீக்கி சருமத்தை பளிச்சென்று வைத்து கொள்ளும். எனவே புதினாவை பயன்படுத்தி சருமத்தை எப்படி பராமரிக்கலாம் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள். அவற்றில் ஒரு ஸ்பூன் புதினா பவுடர், இரண்டு ஸ்பூன் காபி பவுடர், ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இந்த கலவையை சருமத்தில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். பின் 15 நிமிடங்கள் காத்திருந்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர முகம் பொலிவு பெறும்.

ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ்

முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்க – How to remove dead skin:

முகம் பொலிவிழந்து காணப்படுவதற்கு மிக முக்கிய காரணம் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் என்று சொல்லலாம். எனவே சருமத்தில் உள்ள இறந்தசெல்கள் நீங்க முகத்திற்கு நீராவி பிடிப்பதன் மூலம் சரும செல்களுக்கு புத்துயிர் அளிக்கப்படுகிறது. எனவே வாரத்தில் இரண்டு முறை நீராவி பிடியுங்கள். நீராவி பிடிக்கும் பொழுது தண்ணீரில் சிறிதளவு ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து கொள்ளுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

சருமம் மென்மையாக ஃபேஸ் பேக் – How to get smooth skin on face naturally:

சிலருக்கு சருமம் எப்பொழுது பொலிவிழந்து, வறட்சியாக காணப்படும் அப்படி பட்டவர்கள் இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்துங்கள் சருமம் மென்மையாகவும், என்றும் இளமையாகவும் காணப்படும்.

ஒரு  பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு ஸ்பூன் செம்பருத்தி பவுடர் (Hibiscus Powder), ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல், ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸ் மற்றும் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.

பிறகு 15 நிமிடங்கள் காத்திருந்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும் இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் சருமம் என்றும் மென்மையாக காணப்படும்.

முகத்தை ஜொலிக்க செய்யும் கற்றாழை பேஷியல்..!

 

மேற்கண்டவைகளை செய்து வந்தால்  உங்களுடைய முகம் பொலிவு பெற்று (Face Whitening Tips at Home Naturally in Tamil) ஜொலிக்கும்.

 

 இயற்கை அழகு குறிப்புகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami
Advertisement