Hair Growth Oil at Homemade
முடி வளர்ச்சிக்காக பலரும் பல விதமாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் அனைவருக்குமே நீங்கள் பயன்படுத்தும் போது நல்ல ரிசல்ட்டை கொடுத்தாலும் நாளடைவில் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும். அதனால் இயற்கையான முறையில் வீட்டிலையே எண்ணைய் தயாரித்து தலை முடியில் அப்ளை செய்து முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம். அந்த வகையில் இன்றைய பதிவில் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முடியை எப்படி வளர வைப்பது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
கறிவேப்பிலை எண்ணெய்:
கறிவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து வெயிலில் காய வைத்து கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து 100 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் காய வைத்த கருவேப்பிலையை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு எண்ணெய் ஆறியதும் ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும். இந்த எண்ணெயை தலை முடி முழுவதும் தடவி 1 மணி நேரம் கழித்து தலை தேய்த்து குளிக்கவும். இந்த பேக்கை வாரத்திற்கு ஒரு முறை செய்து வரவும்.
ஆச்சரியமாக இருக்கா ஒரே ஒரு பொருளை வைத்து முடியை எப்படி வேகமாக வளரச்செய்வது என்று…
வெங்காய எண்ணெய்:
4 வெங்காயத்தை நறுக்கி அதிலிருந்து சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். அதனுடன் தேங்காய் எண்ணெய் சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை அடுப்பை குறைவான தீயில் வைத்து 15 நிமிடம் கொதிக்க விடவும். ஆறியதும் இதனை தலையில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும்.
செம்பருத்தி எண்ணெய்:
செம்பருத்தி பூக்களை பறித்து ஒரு நாள் முழுவதும் காய வைக்கவும். பிறகு அடுப்பில் கடாய் வைத்து குறைவான தீயில் வைத்து தேங்காய் எண்ணெய் மற்றும் செம்பருத்தி பூக்கள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். ஆறியதும் வடிக்கட்டி கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும். இதனை வாரத்திற்கு ஒரு முறை தலையில் அப்ளை செய்து 1/2 மனை நேரம் கழித்து தலை தேய்த்து குளிக்கவும்.
கேரளா பெண்கள் முடியின் வளர்ச்சிக்காக இந்த எண்ணெய் தான் தடவுகிறார்களாம்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |