வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முடி வேகமாக வளர வெங்காய சாறு, வெந்தயம் மட்டும் போதும்

Updated On: January 28, 2025 6:52 PM
Follow Us:
Fast Hair Growth Secrets Home Remedies in tamil
---Advertisement---
Advertisement

Fast Hair Growth Secrets Home Remedies

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி முடி உதிர்ந்து கொண்டே இருக்கிறது என்று கவலைப்படுவார்கள். இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடாமல் இருப்பது தான். நேரத்திற்கு சரியாக சாப்பிடாமல் இருப்பது, அப்படியே சாப்பிட்டாலும் உணவில் சத்தான உணவுகளை சாப்பிடாமல் பாஸ்ட் பபுட் உணவை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.

நான் சத்தான உணவுகளை தான் சாப்பிடுகிறேன் இருந்தாலும் எனக்கு முடி கொட்டுகிறது என்றால் இந்த பதிவில் கூறியுள்ள இயற்கையான முறையில் 4 குறிப்புகளை பதிவிட்டுள்ளேன் அதில் ஏதவாது ஒன்றை பயன்படுத்தி முடி உதிர்வதை நிறுத்தி, முடி வளர்ச்சியை அதிகப்படுத்துங்கள்.

Fast Hair Growth Tips:

வெங்காய சாறு:

Fast Hair Growth Tips in tamil

வெங்காய சாறு கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது. இதற்கு வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி அதிலிருந்து சாற்றை எடுத்து கொள்ளவும். இந்த சாற்றை தலையில் அப்ளை செய்து 15 நிமிடம் வைத்திருந்து பிறகு ஷாம்பு தேய்த்து தலை குளிக்கலாம்.

தேங்காய் பால்:

Fast Hair Growth Tips in tamil

தேங்காய் பாலில் பொட்டாசியம், இரும்பு சத்து, கொழுப்புகள் நிறைந்திருப்பதால் முடி வளர்ச்சிக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.

ஒரு பவுலில் தேங்காய் பால் சிறிதளவு, எலும்பிச்சை சாறு சிறிதளவு, லாவெண்டர் எண்ணெய் 4 சொட்டு சேர்த்து கலந்து கொள்ளவும். இதை தலை முடியில் தடவி 4 முதல் 5 மணி நேரம் வரை வைத்திருக்கவும். பிறகு தலை தேய்த்து குளிக்கவும்.

நரைமுடியை நிரந்தரமாக கருப்பாக மாற்ற நெல்லிக்காய், கருவேப்பிலையை இப்படி பயன்படுத்துங்கள்

முட்டை வெள்ளை கரு:

Fast Hair Growth Tips in tamil

 

முட்டையில் புரதங்கள், துத்தநாகம், இரும்பு,செலினியம், சல்பர், பாஸ்பரஸ், அயோடின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. 

ஒரு பவுலில் முட்டையின் வெள்ளை கரு, 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை தலையில் அப்ளை செய்து 20 நிமிடம் வைத்திருந்து பிறகு ஷாம்பை பயன்படுத்தி தலை தேய்த்து குளிக்கவும்.

வெந்தயம்:

vendhayam hair pack in tamil

வெந்தயம் முடி வளர்ச்சிக்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது. இதில் உள்ள புரதங்கள், நிக்கோடினிக் அமிலம் முடி வளர்ச்சியை தூண்டுகிறது. 

உங்கள் முடிக்கு தேவையான அளவு வெந்தயத்தை எடுத்து முதல் நாள் இரவே ஊறவைத்து கொள்ளவும். மறுநாள் காலையில் ஊறவைத்த வெந்தயத்தை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ளவும். இந்த பேக்கை தலையில் முடி முழுவதும் அப்ளை செய்து 20 நிமிடம் வைத்திருந்து பிறகு ஷாம்பை பயன்படுத்தி தலை தேய்த்து குளிக்கவும்.

பாதியில் முடி உடைந்து உதிர்கிறதா..! இதை மட்டும் வாரத்தில் 1 முறை செய்யுங்கள்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை