Foot Crack Solution For Home Remedies
வணக்கம் நண்பர்களே..! பொதுவாக இன்றைய நிலையில் பாதவெடிப்பு பிரச்சனை ஆண்கள் மற்றும் பெண்கள் என்று இருவருக்குமே இருக்கிறது. ஆனால் ஆண்களை விட பெண்களுக்கே பாதவெடிப்பு பிரச்சனை அதிகமாக காணப்படுகிறது. பெண்கள் எப்பொழுதும் தண்ணீரில் நின்று வேலை பார்ப்பது தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. சிலருக்கு உடல் சூட்டின் காரணமாக பாதவெடிப்பு வரலாம் என்றும் சொல்லப்படுகிறது.
அதனால் இந்த பாதவெடிப்பை சரி செய்ய வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் இது நாளடைவில் மேலும் பல பாதிப்புகளை ஏற்படுகிறது. அதனால் இனி கடையில் கிடைக்கும் கிரீம்களை பயன்படுத்துவதை விட்டுவிட்டு நம் வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களை பயன்படுத்துவது நல்லது. அந்த வகையில் இன்று பாதவெடிப்பு ஒரே நாள் இரவில் இருந்த இடம் தெரியாமல் மறைய செய்யும் கிரீம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதை நறுக்கி கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
பின் அரைத்த வெங்காயத்தை ஒரு துணியில் வைத்து பிழிந்து சாறை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும்.
முன் நெற்றியில் முடி ஏறிக்கொண்டே செல்கிறது என்று கவலைப்படுபவர்கள் இந்த மட்டும் ட்ரை பண்ணுங்க போதும் |
கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:
அடுத்து ஒரு கிண்ணத்தில் நாம் எடுத்து வைத்துள்ள வெங்காய சாறை ஊற்ற வேண்டும். பின் அதில் எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் அளவிற்கு ஊற்றி கலந்து விட வேண்டும்.
அடுத்து அதில் Colgate பேஸ்ட் 1 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது பாதவெடிப்புகளை மறைய செய்யும் கிரீம் தயாராகிவிட்டது.
அளந்து பார்த்தாலும் அளவிட முடியாத அளவிற்கு முடி வளர இந்த 1 பொருளை மட்டும் தேங்காய் எண்ணெயில் சேர்த்து தடவுங்க போதும் |
அப்ளை செய்யும் முறை:
இந்த கிரீமை அப்ளை செய்வதற்கு முன் உங்கள் பாதங்களை 20 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்த நீரில் ஊறவைக்க வேண்டும்.
பின் உங்கள் பாதங்களை நன்றாக ஸ்க்ரப் செய்து கழுவி ஈரப்பதம் இல்லாமல் துடைக்க வேண்டும்.
அடுத்து நாம் தயார் செய்த பேஸ்டை உங்கள் பாதங்களில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த கிரீம் உங்கள் பாதங்களில் இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். காலையில் எழுந்து பாதங்களை கழுவி கொள்ளலாம். இதுபோல தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் பாதங்களில் இருக்கும் வெடிப்புகள் மறைவதை நீங்களே காண்பீர்கள்.
காது ஓட்டை பெரிதாகி விட்டதே என்று கவலைப்படுபவர்கள் இதை மட்டும் செய்யுங்க நல்ல ரிசல்ட் உங்களுக்கு கிடைக்கும் |
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |