தலையில் எங்கு முடி வளராமல் இருந்தாலும் சரி..! 1 வாரத்திற்கு இந்த தேங்காய் எண்ணெய் தேய்த்தால் போதும்..!

Advertisement

Forehead Hair Growth Tips And Remedies in Tamil

என்ன செய்தாலும் முடி வளரவில்லையா..? கவலையை விடுங்க உங்களுக்காக அருமையான தேங்காய் எண்ணெய் செய்ய போகிறோம்..! நம்முடைய முடியை எவ்வளவு தான் பராமரித்து வந்தாலும் அது உதிர்ந்துகொண்டு தான் உள்ளது..! இதனை தடுப்பதற்கு என்ன தான் செய்ய முடியும் என்று ஒரு கேள்வி இருக்கும். அதேபோல் சிலர் ஒரே மாதிரியாக தலை சீவுவது வழக்கம். ஆனால் தலை முடி அந்த இடத்தில மட்டும் குறைவாகவும் அதேபோல் தலைமுடி இல்லாமலும் இருக்கிறது என்று சிலர் இருப்பார்கள். ஆகவே இந்த பிரச்சனை அனைத்திற்கும் அருமையான தீர்வு இது தாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Forehead Hair Growth Tips And Remedies in Tamil:

தேவையான பொருட்கள்:

  • சின்ன வெங்காயம்
  • நெல்லிக்காய்
  • வெந்தயம்
  • கருஞ்சீரகம்
  • கருவேப்பிலை
  • மருதாணி இலை
  • வேப்பிலை

 forehead hair growth tips and remedies in tamil

முதலில் பெரிய நெல்லிக்காய் 10 எடுத்துக்கொண்டு அதில் இருக்கும் சதையை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளவும். அதன் பின் சின்ன வெங்காயம் தோள் சீவி தனியாக எடுத்துக் கொள்வோம்.. இந்த இரண்டு பொருளையும் தண்ணீர் சேர்க்கமால் அப்படியே அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். அதனை வடிகட்டி தண்ணீரை மட்டும் எடுத்து தனியாக வைப்போம்.

 forehead hair growth tips and remedies in tamil

அதன் பின் வெந்தயம், கருஞ்சீரகம், இரண்டும் 50 கிராம் எடுத்து அதனையும் தனியாக அரைத்து பொடி போல் வைக்கவும்.

இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉👉  இந்த ஹேர் டையினை இவ்ளோ நாளாக ட்ரை பண்ணாம இருக்கீங்களா  அப்றம் எப்படி வெள்ளை முடி கருப்பாக மாறும்

 

 forehead hair growth tips and remedies in tamil

அதன் பின் கருவேப்பிலை, மருதாணி இலை, வேப்பிலை இந்த 3 இலையில் வேப்ப இலையை தவிர மற்ற இரண்டையும் ஒரு கட்டு அளவு எடுத்துக்கொள்ளவும். வேப்பிலை 1 கொத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது மூன்று இலையையும் மிக்சியில் போட்டு அரைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

பிறகு கடாயில் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் நாம் வடிகட்டி வைத்த நெல்லிக்காய் மற்றும் சின்ன வெங்காய சாறை ஊற்றுவோம். சிலர் நினைப்பீர்கள் எண்ணெயில் எப்படி சாறை ஊற்றுவது என்று ஆனால் எண்ணெயை மிதமான தீயில் வைத்து ஊற்றவேண்டும்.

 how to grow hair on forehead naturally faster in tamil

அதன் பின் அது நிறம் மாறி வரும். அதில் நாம் மூன்று இலையையும் அரைத்து வைத்துள்ளதையும் சேர்த்து எண்ணெயை கொதிக்க விடவும்.

 how to grow hair on forehead naturally faster in tamil

அதன் பிறகு எண்ணெய் நிறம் மாறி கருமை நிறத்தை அடையும் வரை கொதிக்கவிடவும். எண்ணெய் மிதமான தீயில் இருக்கவேண்டும். அதன் பிறகு வெந்தயம், கருஞ்சீரக பொடியையும் அதில் சேர்த்து கொதிக்கவிடவும்.

கொஞ்ச நேரம் அப்படியே இருக்கவேண்டும். அது நன்றாக நிறம் மாறிய பின் அதனை எடுத்து ஆறவிட்டு ஒரு துணியை வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

இப்போது அருமையான தேங்காய் எண்ணெய் ரெடி ஆகிவிடும். அதனை ஒரு பாட்டிலில் எடுத்துக் கொள்ளவும். இதனை பயன்படுத்தும் முறை.

 forehead hair growth tips and remedies in tamil

தலைகுளிக்க செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு தேங்காய் எண்ணெயை தலையில் அப்ளை செய்து 20 நிமிடம் மசாஜ் செய்யவும். அதன் பின்பு நீங்கள் சீயக்காய் போட்டு குளிக்கலாம் அல்லது கெமிக்கல் இல்லாத ஷாம்பு பயன்படுத்திக் கொள்ளலாம்.இதனை தினமும் தலைக்கு பயன்படுத்தலாம்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  நரை முடி கருமைப்பாக மாறவில்லையா..! அப்போ ஷாம்புடன் இதை கலந்து தடவிப்பாருங்க

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement