உடல் முழுவதும் வெள்ளையாக
பொதுவாக அனைவரும் முகம் மட்டுமில்லாமல் உடல் முழுவதும் வெள்ளையாக ஜொலிஜொலிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் முகத்திற்கும் தனியாகவும் மற்றும் உடல் வெள்ளையாகுவதற்கும் தனியாக செலவு செய்து கிரீம் வாங்கி அப்ளை செய்வார்கள். இனி நீங்கள் இதற்காக தனித்தனியாக செலவு செய்யாமல் வீட்டில் இருந்த படியே முகம் மற்றும் உடல் முழுவதும் ஜொலிஜொலிக்க வாரம் 1 முறை இன்றைய பதிவில் சொல்லப்பட்டுள்ளதை ட்ரை செய்தால் போதும். நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு முகம் மற்றும் உடல் முழுவதும் பளபளக்கும். சரி வாருங்கள் இன்றைய பதிவை படித்து தெரிந்துக்கொண்டு பயன்பெறலாம்.
இதையும் படியுங்கள்⇒ விளக்கெண்ணெயை இப்படி பயன்படுத்தினால் முடி காடுபோல் வளரும்..!
Full Body Whitening Cream at Home in Tamil:
முகம் மற்றும் உடல் வெள்ளையாகுவதற்கு பவுடர் தயார் செய்ய வேண்டும். அதை பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கிரீம் தயார் செய்ய தேவையான பொருட்கள்:
- கடலை மாவு- 2 ஸ்பூன்
- வெள்ளை உளுந்து மாவு பவுடர்- 3 ஸ்பூன்
- அரிசி மாவு- 1 ஸ்பூன்
- முல்தானி மெட்டி- 1/4 ஸ்பூன்
- பால்- 1/4 டம்ளர்
- தயிர்- 3 ஸ்பூன்
- பாலாடை- 1 ஸ்பூன்
- உருளைக்கிழங்கு- 1
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: 👉 https://bit.ly/3Bfc0Gl
பவுடர் தயார் செய்வது எப்படி..?
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் எடுத்துவைத்துள்ள கடலை மாவு, உளுந்து மாவு, அரிசி மாவு மற்றும் முல்தானி மெட்டி போன்ற அனைத்தையும் போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இப்போது நீங்கள் தயார் செய்து வைத்துள்ள பவுடரை வைத்து மூன்று முறைகளில் அப்ளை செய்ய வேண்டும்.
அப்ளை செய்யும் முறை- 1
நீங்கள் எடுத்துவைத்துள்ள உருளைக்கிழங்கில் இருந்து 3 ஸ்பூன் சாறு பிழிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் தயார் செய்து வைத்துள்ள பவுடரில் 2 ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதனுடன் 3 ஸ்பூன் தயிர் மற்றும் உருளைக்கிழங்கு சாறு ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள். இப்போது கிரீம் தயாராகிவிட்டது.
நீங்கள் தயார் செய்த கிரீமை முகத்திற்கு சோப் போட்ட பிறகு அப்ளை செய்யுங்கள். இந்த கிரீமை நீங்கள் உபயோகப்படுத்துவதன் மூலம் முகத்தில் இருக்கும் அனைத்து கருமைகளும் நீங்கிவிடும்.
அப்ளை செய்யும் முறை- 2
ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் 2 ஸ்பூன் தயார் செய்த பவுடர் எடுத்துக்கொண்டு அதனுடன் 1/4 டம்ளர் காய்ச்சாத பால் ஊற்றி பேஸ்ட் போன்ற பதத்திற்கு வரும் வரை கலந்து கொண்டு உங்களுடைய முகத்தில் அப்ளை செய்து விடுங்கள்.
இந்த செயல் முறையானது முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை மற்றும் பருக்களை நீக்கி முகத்தை பளபளக்க செய்யும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முடி நீளமா அடர்த்தியா வளர தேங்காய் எண்ணெய்யுடன் இந்த ஒரு எண்ணெய் சேர்த்து தலையில் தடவி போதும்!
அப்ளை செய்யும் முறை- 3
அதேபோல ஒரு கிண்ணத்தில் தயார் செய்து வைத்துள்ள பவுடர் 2 ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதனுடன் பிரிட்ஜில் வைத்த பாலாடை 1 ஸ்பூன் மற்றும் 1 ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இப்போது உங்களுடைய முகத்தை சோப் போட்டு கழுவி விடுங்கள். அதன் பிறகு தயார் செய்த கிரீமை முகத்திற்கு அப்ளை செய்து விடுங்கள். அடுத்து குளிப்பதற்கு முன்பு இந்த கிரீமை உடல் முழுவதும் அப்ளை செய்து சோப் போடாமல் குளித்து விடுங்கள்.
வாரம் 1 முறை இதை போல மூன்று முறைகளில் அப்ளை செய்து பாருங்கள் முகம் மற்றும் உடல் முழுவதும் பளபளக்கும். (குறிப்பு: அழற்சி உடையவர்கள், மிருதுவான சருமம் கொண்டவர்கள் மற்றும் சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் இதை ட்ரை செய்ய வேண்டாம்)
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |