முகம் பளபளப்பாக என்ன செய்யலாம் | Glowing Face Tips in Tamil
வணக்கம் நண்பர்களே.! உங்களின் அழகை மேம்படுத்துவதற்கு நிறைய டிப்ஸ் சொல்லி வருகிறோம். அந்த வகையில் முகம் பளபளப்பாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். பெண்கள் எப்போதுமே அழகாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதிலும் எதாவது சுப நிகழ்ச்சிக்கு செல்லும் பொழுது எவ்வளவு தான் make up போட்டாலும் சிறிது நேரத்திலே கலை இல்லாமல் போகிவிடும். அதுமட்டுமில்லாமல் கடையில் விற்கும் கிரீம்களை முகத்தில் தடவுவீர்கள். அப்படி தடவும் பொழுது முகத்தில் ஒவ்வாமை ஏற்படும். இந்த பிரச்சனையெல்லாம் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே முகத்தை பளபளப்பாக்குவது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.
இதையும் படியுங்கள்⇒ சமையலுக்கு தேவைப்படும் புளியை வைத்து முகத்தை அழகாக மாற்றலாம்..!
முகம் பளபளப்பாகுவதற்கு தேவையான பொருட்கள்:
⇒ தக்காளி
⇒ மஞ்சள் தூள்
⇒ சீனி
⇒ எலுமிச்சை பழச்சாறு
⇒ கடலை மாவு
⇒ கற்றாழை ஜெல்
முகம் பளபளப்பாக டிப்ஸ் 1
தக்காளி | மஞ்சள்தூள்
முதலில் தக்காளியை இரண்டாக வெட்டி கொள்ளவும். அதில் ஒரு பாதி தக்காளியை எடுத்து அதில் மஞ்சள் தூள் தடவி முகத்தில் 5 நிமிடம் நன்றாக தடவுங்கள். நீங்கள் வெளியில் செல்லும் பொழுது இந்த டிப்ஸை பயன்படுத்துங்கள். உங்கள் முகம் பளபளப்பாக இருக்கும்.
முகம் பளபளப்பாக டிப்ஸ் 02:
தக்காளி | சீனி
இரவு தூங்குவதற்கு முன் பாதி தக்காளியை எடுத்து அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் சீனியை சேர்த்து முகத்தில் நன்றாக தடவுங்கள். காலையில் முகத்தை கழுவினால் எப்படி இருக்கும் என்று செய்து பாருங்கள்.
முகம் பளபளப்பாக டிப்ஸ் 03:
எலுமிச்சை பழச்சாறு | பால்
ஒரு எழுப்பிச்சை பழம் எடுத்து அதன் சாறுகளை பிழிந்து எடுத்து கொள்ளவும். பின்பு அந்த சாறுடன் காய்ச்சாத பால் சிறுது ஊற்றி நன்கு கலக்கவும். இந்த பேஸ் பேக்கை முகத்தில் தடவினால் முகத்தில் உள்ள கிருமிகளை நீக்கி முகத்தை பளபளப்பாக செய்யும்.
முகம் பளபளப்பாக டிப்ஸ் 04:
கடலைமாவு | கற்றாழை ஜெல்
ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவு, சிறிது மஞ்சள் தூள், கற்றாழை ஜெல் மூன்றையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும். தூங்க போவதற்கு முன் இந்த பேஸ் பேக்கை தடவி 30 நிமிடம் வைத்திருங்கள். அதன் பிறகு கழுவி விடுங்கள். காலையில் முகத்தை பாருங்கள் பளிச்சென்று இருக்கும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |