Glowing Skin Face Pack at Home in Tamil
நம்முடைய முகம் Glowing Skin போல மாற வேண்டும் என்பதற்காக எப்போதும் முகத்திற்கு எதாவது அப்ளை செய்து பார்த்து கொண்டிருப்போம். அதோடு மட்டுமில்லாமல் பிரண்ட்ஸ் சொல்வது மற்றும் நம்முடைய வீட்டில் அக்கம் பக்கத்தினர் சொல்வது என்று நிறைய முகத்திற்கு ட்ரை செய்து இருப்போம். ஆனால் அதற்கான பலன்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். இன்றைய பதிவில் வெறும் 5 நிமிடத்தில் நீங்கள் எதிர்பார்த்த மாதிரியான Glowing சருமத்தை பெறுவதற்கு என்ன Face Pack பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துக்கொண்டு நீங்களும் Glowing Skin-னை பெறலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ பனிக்காலத்தில் அதிகம் தலைமுடி கொட்டுகிறதா..! தேங்காய் எண்ணையுடன் இதை கலந்து தடவுங்கள்..!
முகம் பளபளப்பாக என்ன செய்யலாம்:
முகம் பளபளப்பாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முதல் ஒரு Face பேக் தயார் செய்ய வேண்டும்.
தேவையான பொருட்கள்:
- பாசி பயிறு- 4 ஸ்பூன்
- ஆரஞ்சு பழம்- 1
- தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன்
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
ஃபேஸ் பேக் செய்வது எப்படி..?
ஸ்டேப்- 1
முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொண்டு அதில் எடுத்துவைத்துள்ள பாசி பயிரினை போட்டு நன்றாக பவுடர் போல அரைத்து ஒரு கிண்ணத்தில் வைத்து விடுங்கள்.
ஸ்டேப்- 2
அடுத்து 1 ஆரஞ்சு பழத்தில் இருந்து சாறு பிழிந்து தனியாக வைத்து கொள்ளுங்கள். நீங்கள் பிழியும் சாறு தண்ணியாக இல்லாமல் கெட்டியான பதத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 3
இப்போது ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் 1 1/2 ஸ்பூன் அரைத்து வைத்துள்ள பாசி பயிறு பவுடர் மற்றும் 1 ஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறு சேர்த்து நன்றாக 5 நிமிடம் கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 4
5 நிமிடம் கழித்த பிறகு கிண்ணத்தில் இருக்கும் பொருட்களுடன் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து மீண்டும் நன்றாக கலந்து சிறிது நேரம் அப்படியே வைத்து விடுங்கள். இப்போது உங்களுடைய முகத்திற்கு Face பேக் தயார்.
ஸ்டேப்- 5
நீங்கள் தயார் செய்து வைத்துள்ள Face பேக்கை முகத்தில் நன்றாக அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள்.
இந்த Face பேக்கை அப்ளை செய்த முடித்து விட்டு முகத்தை கழுவிய பிறகு பாருங்கள் நீங்கள் தானா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு முகம் Glowing Skin போல மாறியிருக்கும்.
இதையும் படியுங்கள்⇒ நரை முடியை நிரந்தரமாக கருப்பாக மாற்ற இந்த ஒரு எண்ணெயை மட்டும் பயன்படுத்துங்க..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |