வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நரை முடியை கருப்பாக மாற்றவும், முடி நீளமாக வளருவதற்கும் ஒரே ஒரு எண்ணெய் மட்டும் போதும்..!

Updated On: November 26, 2024 12:19 PM
Follow Us:
grey hair turn black naturally in tamil
---Advertisement---
Advertisement

நரைமுடி கருப்பாக மாற

இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உள்ள தீராத பிரச்சனை என்னவென்றால் அது நரைமுடி பிரச்சனை தான். நீங்களும் நரைமுடி பிரச்சனையை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு அதற்கு என்ற நிறைய ஹேர் டை மற்றும் ஹேர் பேக் பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் அதுமாதிரி செயற்கையான ரசாயன பொருட்கள் கலந்து ஹேர் பேக்கோ அல்லது ஹேர் டையோ நமது தலை முடிக்கு பயன்படுத்துவது அவ்வளவு நன்மை கிடையாது. அதனால் இன்றைய பதிவில் நீங்கள் எதிர்பார்த்த மாதிரி நரை முடியை கருப்பாக மாற்றி என்றும் இளமையாக இருப்பதற்கும் மற்றும் முடியை நீளமாக வளர செய்வதற்கும் எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

How to Turn Grey Hair Into Black Permanently Naturally:

நரை முடி கருப்பாக மாற என்ன செய்ய வேண்டும்

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இயற்கையான முறையில் ஹேர் ஆயில் தயாரித்து உங்களுடைய தலையில் உள்ள நரைமுடியை கருப்பாக மாற்றலாம். அதனை பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேவையான பொருட்கள்:

  1. கருவேப்பிலை- 1 கைப்பிடி அளவு
  2. துளசி இலை- சிறிதளவு அளவு
  3. கருஞ்சீரகம்- 1 தேக்கரண்டி 
  4. வெந்தயம்- 1 தேக்கரண்டி 
  5. பெரிய நெல்லிக்காய்- 2
  6. தேங்காய் எண்ணெய்- 200 மில்லி 
  7. விளக்கெண்ணெய்- 2 தேக்கரண்டி 

இதையும் படியுங்கள்⇒ ஒரே ஒரு நாள் இரவில் கருவளையம் மறைய சூப்பரான இந்த Face Pack ட்ரை பண்ணுங்க..!

நரை முடி கருப்பாக மாற எண்ணெய்:

ஸ்டேப்- 1

முதலில் ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை எடுத்துக்கொண்டு அதனை சுத்தமாக தண்ணீரில் அலசி வைத்து கொள்ளுங்கள். அதன் பின்பு 2 நெல்லிக்காய் எடுத்துக்கொண்டு அதன் உள்ளே இருக்கும் கொட்டையினை நீக்கி வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 2

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் 1 கைப்பிடி கருவேப்பிலை மற்றும் சிறிதளவு துளசி, 2 பெரிய நெல்லிக்காய், 100 மில்லி தேங்காய் எண்ணெய் இவை அனைத்தையும் முதலில் நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3

இப்போது மிக்ஸியில் இருக்கும் பொருளுடன் 1 தேக்கரண்டி கருஞ்சீரகம் மற்றும் 1 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்றாக அரைத்து தனியாக கிண்ணத்தில் வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 4

அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்த்து சிறிது நேரம் கலந்து கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் உள்ள விளக்கெண்ணெயுடன் 100 மில்லி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.

ஸ்டேப் – 5

அடுப்பில் இருக்கும் எண்ணெய் கொதித்த பிறகு அதனுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கரண்டியால் கலந்து கொண்டே இருங்கள்.

அதன் பிறகு பாத்திரத்தில் இருக்கும் எண்ணெயுடன் 10 கருவேப்பிலை இலை அதன் மேலே போட்டு கருவேப்பிலை கருப்பாக மாறும் வரை எண்ணெயை கொதிக்க விடுங்கள்.

ஸ்டேப்- 6

5 நிமிடம் கழித்த பிறகு அடுப்பில் இருக்கும் எண்ணெயினை அடுப்பில் இருந்து இறக்கி வைத்து 1/2 மணி நேரம் ஆற விடுங்கள்.

1/2 மணி நேரம் கழித்த பிறகு நீங்கள் தயார் செய்து வைத்துள்ள எண்ணெயை மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டி வைத்து அதன் மேல் காட்டன் துணி வைத்து எண்ணெயை வடிகட்டி கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்⇒ கேரளா பெண்கள் முகம் போல் இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

அப்ளை செய்யும் முறை:

 how to turn grey hair into black permanently naturally in tamil

நீங்கள் தயார் செய்த எண்ணெயை ஒரு வாரம் தலையில் தடவினால் போதும் நரைமுடி பிரச்சனை நீங்கி முடி நீளமாக வளருவதற்கும் மற்றும் பொடுகு தொல்லையினையும் நீக்கி விடும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now