லேட் பண்ணாம உடனே இதை ட்ரை பண்ணா போதும் நரைமுடி கருப்பாக மாறிவிடும்..!

grey hair turning black naturally in tamil

Grey Hair Turning Black Naturally in Tamil

யாருக்கு தான் நரைமுடி பிரச்சனை இல்லாமல் இருக்கிறது என்றால் அதற்கான பதிலை நாம் கணிக்கிடவே முடியாது. ஏனென்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் இந்த நரைமுடி பிரச்சனை உள்ளது. இத்தகைய பிரச்சனையை எப்படியாவது சரிசெய்து தலையில் இருக்கும் நரைமுடியினை கருப்பாக மாற்றுவதற்கு நீங்களும் எவ்வளவு ட்ரை செய்து இருப்பீர்கள். ஆனால் அவை அனைத்தும் நன்மையும் கிடையாது மற்றும் நீண்ட நாட்களுக்கு நிலைத்தும் இருப்பது இல்லை. அதனால் தான் இயற்கையான முறையில் வீட்டில் கிடைக்க கூடிய பொருட்களை வைத்து எண்ணெய் தயாரித்து நரைமுடி கருப்பாக மாற்றுவது எப்படி என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

நரைமுடி கருப்பாக மாற:

நரைமுடி மாறுவது எப்படி

நரைமுடி கருப்பாக மாற முதலில் ஒரு எண்ணெய் தயார் செய்ய வேண்டும். அதனை பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

  • கடுகு எண்ணெய்- 200 மில்லி
  • வெந்தயம்- 2 தேக்கரண்டி 
  • கருஞ்சீரகம்- 2 தேக்கரண்டி 
  • கறிவேப்பிலை- 1 கைப்பிடி 
  • நெல்லிக்காய் பவுடர்- 2 தேக்கரண்டி

இதையும் படியுங்கள்👇👇👇முகத்தில் போகவே போகாதுனு இருந்த பருக்கள் உடனே போக இதை ட்ரை பண்ணுங்க…!

நரைமுடி கருமையாக எண்ணெய்:

வெந்தயம் பொடி தயார் செய்தல்:

 வெந்தயத்தில் வைட்டமின் B6, வைட்டமின் C, வைட்டமின் D, இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. இந்த சத்துக்கள் அனைத்தும் முடியின் ஆழம் வரை சென்று முடியை நீளமாகவும் மற்றும் நரை முடி இல்லாமலும் வளர செய்யும். 

அதனால் ஒரு மிக்சி ஜாரில் 2 தேக்கரண்டி வெந்தயம் எடுத்துக்கொண்டு அதில் தண்ணீர் எதுவும் சேர்க்காமல் பவுடர் போல அரைத்து கொள்ளுங்கள்.

கருஞ்சீரக பவுடர் தயார் செய்தல்:

அதேபோல எடுத்துவைத்துள்ள கருஞ்சீரக பவுடரையும் மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக பவுடரை போல அரைத்து கொள்ள வேண்டும்.

கறிவேப்பிலை பவுடர் தயார் செய்தல்:

எடுத்துவைத்துள்ள கறிவேப்பிலையை  வெயிலில் நன்றாக தண்ணீர் எதுவும் இல்லாமல் காய வைக்க வேண்டும். பின்பு அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து பவுடர் போல அரைக்க வேண்டும்.

கறிவேப்பிலை முடி வளர்ச்சி மற்றும் நரைமுடியை கருப்பாக மாற்ற சிறந்த தீர்வினை அளிக்கும்.

கடாயில் பொருட்களை சேர்த்தல்:

இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தயார் செய்து வைத்துள்ள வெந்தயம் பவுடர், கருஞ்சீரக பவுடர் மற்றும் எடுத்துவைத்துள்ள நெல்லிக்காய் பவுடர், கறிவேப்பிலை பவுடரை ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் சேர்த்தல்:

அதன் பிறகு கடாயில் உள்ள பவுடருடன் கடுகு எண்ணெய் 200 மில்லி சேர்த்து நன்றாக 15 நிமிடம் கொதிக்க வேண்டும். 15 நிமிடம் கழித்த பிறகு தயார் செய்து வைத்துள்ள எண்ணெயை ஆறவிடுங்கள். இப்போது உங்களுடைய முடிக்கு எண்ணெய் தயார் ஆகிவிட்டது.

இதையும் படியுங்கள்⇒ 3 நாட்களில் உங்கள் முகம் நிலவு போல் ஜொலிக்க வேண்டுமா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க நிலவை விட அழகாக ஜொலிக்கலாம்..!

அப்ளை செய்யும் முறை:

நரைமுடி கருமையாக எண்ணெய்

நீங்கள் தயார் செய்து வைத்துள்ள எண்ணெயை வாரம் இரண்டு முறை நன்றாக தலையில் அப்ளை செய்து 10 நிமிடம் வரை மசாஜ் செய்து வழக்கம் போல தலை குளித்து விடுங்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் தலையில் உள்ள நரைமுடி கருப்பாக விரைவில் மாறி இருப்பதை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil