ஓயாமல் முடி கொட்டிக் கொண்டே இருக்கிறதா? அப்படின்னா இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

Hair Fall Solution in Tamil

முடி உதிர்வதை தடுக்க டிப்ஸ் | Hair Fall Solution in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. பொதுவாக பலர் முடி உதிர்வு பிரச்சனையை தடுக்க பலவகையான எண்ணெய்களை பயன்படுத்தி இருப்பார்கள், பல வகையான ஷாம்புக்களை பயன்படுத்தி இருப்பார்கள், பல வகையான டிப்ஸினையும் பயன்படுத்தி இருப்பார்கள். இருந்தாலும் அவையெல்லாம் முழுமையான பலன்களை அளிக்கவில்லையே என்று வருந்துவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது முட்டையை பயன்படுத்தி இரண்டு வகையான டிப்ஸினை பற்றி நாம் இப்பொழுது பார்க்க உள்ளோம். அதனை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்வு பிரச்சனையை தடுத்து, முடி அடர்த்தியாக வளர் செய்யும். சரி வாங்க அது எப்படி செய்யலாம் என்று இப்பொழுது பார்க்கலாம்.

முடி உதிர்வதை தடுக்க டிப்ஸ்: 1

தேவையான பொருட்கள்:

  1. முட்டை – 1
  2. தயிர் – 4 ஸ்பூன்
  3. விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன்
  4. எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன்

செய்முறை:

ஒரு பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் நான்கு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

பிறகு அதனுடன் ஒரு முட்டையை மஞ்சள் கருவுடன் சேர்த்து ஊற்றி நன்றாக கலந்துகொள்ளுங்கள்.

அவ்வளவு தான் ஹேர் பேக் தயாராகிவிட்டது இதனை தலையில் நன்றாக அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து தலையை நன்கு குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.

இவ்வாறு வாரத்தில் ஒரு முறை இந்த டிப்ஸை செய்து வந்தால் முடி உதிர்வு பிரச்சனை நீங்கும். முடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
3 பொருள் போதும் 7 நாளில் வெள்ளை முடியை முழுமையாக மாற்றிடலாம்..! கருவேப்பிலை ஹேர் டை..!

முடி உதிர்வதை தடுக்க டிப்ஸ்: 2

தேவையான பொருட்கள்:

  • முட்டை – 2 (வெள்ளை கரு மட்டும்)
  • தேங்காய் பால் அல்லது பசும் பால் – 4 ஸ்பூன்
  • விட்டமின் மாத்திரை – ஒன்று

செய்முறை:

ஒரு பவுலில் இரண்டு முட்டையின் வெள்ளை கருவை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.

பிறகு அதில் ஒரு விட்டமின் மாத்திரையின் ஆயில் மற்றும் தேங்காய் பால் மற்றும் பசும் பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்.

அவ்வளவு தான் ஹேர் பேக் தயார் இதனை தலையில் நன்றாக அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து தலையை குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.

இந்த முறையையும் வாரத்தில் ஒரு முறை செய்து வந்தாலே போதும் தலை முடி உதிர்வு பிரச்சனை நீங்கி முடி வளர்ச்சி அடையும்.

மேல் கூறப்பட்டுள்ள இரண்டு டிப்ஸில் ஏதாவது ஒன்றை வாரத்தில் ஒரு முறை ட்ரை செய்தாலே போதும் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நரை முடி மறைய இந்த ஹேர் டையை பயன்படுத்துங்கள்.. 100% நரை முடி கருமையாக மாறிடும்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil