வால் போல் இருக்கும் உங்க முடியை கட்டுக்கடங்காமல் காடு போல் வளர வைக்க இதை மட்டும் பண்ணுங்க போதும்..!

Advertisement

Hair Grow Thicker And Longer Faster Hair Pack in Tamil

வணக்கம் நண்பர்களே..! பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே உடல் ரீதியாக பல பிரச்சனைகள் இருக்கும். அதாவது, முடி உதிர்வு, முகப்பருக்கள், பொடுகு தொல்லை, கரும்புள்ளிகள் மற்றும் நரைமுடி போன்ற பிரச்சனைகளை பற்றி தான் கூறுகிறோம். ஆனால் நாம் அனைவருமே இதுபோன்ற பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இதனால் நாளடைவில் மேலும் பல பாதிப்புகள் வருகின்றன.

அப்படி பெண்கள் செய்யும் தவறுகளில் இதுவும் ஓன்று. அது என்னவென்றால் பொதுவாக பெண்களுக்கு முடி நீளமாக வளர் வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக கடைகளில் கிடைக்கும் கண்ட எண்ணெய்கள் மற்றும் ஷாம்புக்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் இனி அப்படி செய்ய தேவையில்லை. இந்த ஹேர் பேக்கை மட்டும் ட்ரை செய்து பாருங்கள். உங்கள் முடியின் வளர்ச்சியை கண்டு நீங்களே ஆச்சர்யபடுவீர்கள்.

உருளைக்கிழங்கு எடுத்து கொள்ளவும்:

உருளைக்கிழங்கு எடுத்து கொள்ளவும்

முதலில் 1 உருளைக்கிழங்கு அல்லது உங்கள் முடிக்கு தேவையான அளவு உருளைக்கிழங்கை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதை சுத்தமாக கழுவி எடுத்து கொள்ளவும். பின் அதன் தோலை நீக்கி விட்டு அதை காய் சீவும் கட்டியில் வைத்து சீவி கொள்ள வேண்டும்.

உருளைக்கிழங்கில் பல்வேறு சத்துக்கள் இருக்கின்றன. அதனால் உருளைக்கிழங்கில் இருக்கும் சத்துக்கள் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த உதவுகின்றன. அதுமட்டுமில்லாமல் உருளைக்கிழங்கு தலைமுடி பிரச்சனை அனைத்திற்கும் ஒரு தீர்வாக இருக்கிறது.

அதனால் உங்கள் முடிக்கு தேவையான அளவு உருளைக்கிழங்கை சீவி எடுத்து கொள்ளுங்கள்.

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளபளப்பாக தெரிய பாலுடன் இதை கலந்து தடவுங்க

பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும்:

பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும்

பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் போதுமான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். பின் அதில் நாம் சீவி எடுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு நன்றாக கலந்து விட வேண்டும்.

அதை நன்றாக கொதிக்க விட வேண்டும். உருளைக்கிழங்கு நன்றாக வெந்து வந்ததும் அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும். பின் அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக பேஸ்ட் போல அரைத்து கொள்ள வேண்டும்.

பின் அதில் வைட்டமின் E-Capsule மாத்திரை ஓன்று சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

முடி அனைத்தும் வெள்ளையாக இருந்தாலும் சரி அதை கருமையாக மாற்ற இந்த பூ மட்டும் போதும்

அப்ளை செய்யும் முறை:

இந்த ஹேர் பேக்கை உங்கள் தலையில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின் இந்த ஹேர் பேக் உங்கள் தலையில் குறைந்தது 20 நிமிடம் வரை அப்படியே இருக்கட்டும். பின் உங்கள் தலையை ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு அலசி கொள்ளலாம். இதுபோல வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் உங்கள் முடியின் வளர்ச்சியை நீங்களே ஆச்சர்யப்படுவீராகள்.

மெலிந்து வால் போல இருக்கும் முடியை அடர்த்தியாக மாற்ற இந்த ஒரு எண்ணெய் போதும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement