தினமும் முகத்தில் இதை மூன்று சொட்டு தடவினால் போதும்..! இனி நீங்கதான் பேரழகு..!

homemade face cream tamil

தினமும் முகத்தில் இதை மூன்று சொட்டு தடவினால் போதும்..! இனி நீங்கதான் பேரழகு..! 

Homemade Face Cream Tamil:- வணக்கம் தோழிகளே..! இன்றைய பொதுநலம் பதிவில் சருமத்தை என்றும் வெள்ளையாக வைத்துக்கொள்ள கூடிய ஒரு அருமையான இயற்கை ஃபேஸ் கிரீம் எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றித்தான் தெரிந்துகொள்ள போகின்றோம். இந்த ஃபேஸ் கிரீம் அனைவரது சருமத்திற்கும் ஏற்ற ஒரு சிறந்த பேஷியல் கிரீம் என்று சொல்லலாம். அதாவது ஆயில் சருமத்திற்கு, வறண்ட சருமத்திற்கு, கருமையான சருமத்திற்கு, கருவளையத்திற்கு, கரும்புள்ளிகள் மற்றும் கரும்திட்டுகளுக்கு ஒரு சிறந்த ஃபேஸ் கிரீமாகும் சரி வாங்க எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.

தேவையான பொருட்கள்:-

  1. சிறிய கற்றாழை மடல் – ஒன்று
  2. டீ ட்ரி ஆயில் – மூன்று துளிகள்
  3. ரோஸ் வட்டார – ஒரு ஸ்பூன்
  4. காற்றுப்புகாத பாட்டில் – ஒன்று

கற்றாழை பேஸ் கிரீம் செய்முறை – Aloe Vera Face Cream Homemade:-

ஒரு சிறிய கற்றாழை மடலை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் உள்ள தோலினை நீக்கிவிட்டு ஜெல்லினை மட்டும் தனியாக எடுத்து கொள்ளுங்கள். பின் இந்த கற்றாழை ஜெல்லினை சுத்தமான நீரில் ஐந்து முறை நன்றாக கழுவி கொள்ளுங்கள்.

பிறகு காய்கறி நறுக்கும் கட்டிங் போர்டில் இந்த கற்றாழை ஜெல்லினை சிறு சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். இவ்வாறு நறுக்கும்பொழுது கற்றாழை ஜெல்லானது ஒரு ஜெல் பதத்திற்கு வரும்.

பின் இதனை ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு அதனுடன் மூன்று சொட்டுகள் டீ ட்ரி ஆயில் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பின் இதனை ப்ரிட்ஜியில் வைத்து ஒரு வரம் வரை சருமத்திற்கு பயன்படுத்தலாம்.

கேரளா பெண்களின் அழகு ரகசியம் இது தான்..!

Homemade Face Cream Tamil – பயன்படுத்தும் முறை:-

தினமும் இரவு தூங்குவதற்கு முன் நாம் தயாரித்த இந்த ஜெல்லினை மூன்று சொட்டுகள் எடுத்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். பின் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதினால் சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். அதாவது கரும்புள்ளிகள், கரும்திட்டுகள், வறண்ட சருமம், ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் என அனைவரும் இந்த ஃபேஸ் கிரீமை தினமும் இரவு உறங்குவதற்கு முன் முகத்தில் அப்ளை செய்து மறுநாள் காலை குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவி வர நல்ல பலன் கிடைக்கும்.

அதாவது சருமம் என்றும் இளமையாகவும், பொலிவுடனும் காணப்படும்.

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil