முடி பளபளப்பாக இருக்க
உங்களின் அழகை எடுத்து காட்டுவதற்கு முடி முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தலைமுடியை பராமரிப்பது முக்கியமான ஒன்றாகும். வாரத்தில் ஒரு எண்ணெய் தேய்த்து குளிப்பது எவ்வளவு முக்கியமோ அது போல ஹேர் கண்டிஷனர் செய்வது அவசியமானதாகும். நீங்கள் கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவது உங்களின் உடலில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் வீட்டிலே சில பொருட்களை பயன்படுத்தி கண்டிஷனர் செய்வதால் முடி பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். அது என்னென்ன பொருட்கள் எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..
இதையும் படியுங்கள்⇒ ஒரு நிமிடத்தில் அனைத்து நரை முடியும் கருப்பாக மாறும் அஞ்சனக்கல் ஹேர் டை அதிசயம் ஆயுசுக்கும் நரை முடி வராது
தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர்:
முதலில் ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன், தேன் 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு 1 ஸ்பூன், ரோஸ் வாட்டர் 1 ஸ்பூன் எடுத்து கொள்ளவும். இந்த பொருட்களை நன்றாக பேஸ்ட்டாக கலக்கவும். பின் தலை குளிப்பதற்கு முன்பு இந்த பேஸ்ட்டை தலை முடியில் தடவவும். பின் 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் தலையை அலசி விடுங்கள்.
கற்றாழை முடிக்கு:
ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு கற்றாழை ஜெல், எலும்பிச்சை சாறு சேர்த்து இரண்டையும் கலந்து கொள்ளவும். பின் இந்த பேஸ்ட்டை தலை முடியில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து வெண்ணீரில் தலையை அலசி விட வேண்டும்.
முட்டை முடி:
ஒரு கிண்ணத்தில் உங்களது முடிக்கு தேவையான அளவு முட்டை, எலுமிச்சை சாறு 2 ஸ்பூன், ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன், தேன் 1 ஸ்பூன் சேர்த்து நல்லா பேஸ்ட்டாக கலக்கவும். பின் முடியின் அடிப்பகுதியில் இந்த பேஸ்ட்டை தடவவும். பிறகு 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் தலையை அலசி விடுங்கள்.
வாழைப்பழம்:
உங்களது முடிக்கு தேவையான அளவு வாழைப்பழம், தேன் 3 ஸ்பூன், 3 ஸ்பூன் பால், ஆலிவ் எண்ணெய் 3 ஸ்பூன், 1 முட்டையின் மஞ்சள் கரு மட்டும் எல்லாம் சேர்த்து நன்கு மசிக்கவும். சேர்த்த எல்லாம் பொருட்களும் நன்றாக பேஸ்ட்டாக வரும் வரை கலக்கவும். பிறகு இந்த பேஸ்ட்டை தலை முடியில் அப்பளை செய்து 20 நிமிடம் வரை வைத்திருங்கள். பிறகு தலையை குளிர்ந்த நீரில் அலசி விடுங்கள்.
தயிர் மற்றும் முட்டை:
ஒரு கிண்ணத்தில் 1 முட்டை மற்றும் 6 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை உங்களது தலை முடியில் அப்ளை செய்யுங்கள். பிறகு 30 நிமிடம் வரைக்கும் தலையில் வைத்திருந்து பின் தலையை குளிர்ந்த நீரில் அலசி விடுங்கள்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |