Best Hair Pack For Hair Growth in Tamil
ஒவ்வொரு பெண்ணிற்கும் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் ஒரு சில பெண்களுக்கு மட்டும் தான் முடி நீளமாக இருக்கும். அவர்களின் முடியை பார்த்து மற்ற பெண்கள் ஆச்சரியப்படுவார்கள். பெண்கள் அனைவருக்குமே கூந்தல் தான் அழகு என்பார்கள். சில பெண்களுக்கு முடி வளராமல் அப்படியே இருக்கும். அதுமட்டுமில்லாமல் கொட்டவும் செய்யும். அப்படி இருக்கும் பெண்களுக்கு இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பதிவில் வெந்தயத்தை எப்படி பயன்படுத்தி முடியை நீளமாக வளரவைப்பது என்பதை கொடுத்துள்ளோம். எனவே முடி கொட்டாமல் அடர்த்தியாக வளர வைக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் இப்பதிவை முழுவதுமாக படித்து பயனடையுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Natural Hair Pack For Hair Growth in Tamil:
முடி நீளமாக வளர தேவையான பொருட்கள்:
- வெந்தயம்- 150 கிராம்
- பாசிப்பயறு- 250 கிராம்
- கறிவேப்பிலை- 2 கைப்பிடி
முடி நீளமாக வளர என்ன செய்ய வேண்டும்:
ஸ்டேப்: 1
முதலில் கறிவேப்பிலையை கழுவி விட்டு, தண்ணீர் இல்லாமல் துடைத்து எடுத்து கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் கறிவேப்பிலையை சேர்த்து வறுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 2
கறிவேப்பிலை நன்றாக வதங்கி வாசனை வந்ததும் அதனை எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 3
பிறகு அதே பாத்திரத்தில் வெந்தயம் மற்றும் பாசிப்பயிரினை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுத்து கொள்ளுங்கள். இதை ஒரு 5 நிமிடம் ஆறவைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 4
இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்த வெந்தயம், பாசிப்பயிறு மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து பவுடர் போல் அரைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 5
இவற்றை ஒரு கண்ணாடி டப்பாவில் போட்டு நன்றாக மூடி வைத்து கொள்ளுங்கள். இதை நீங்கள் தலை குளிக்கும் போது எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.
7 நாட்களில் 3 அடி வரை முடி வளர தேங்காய் ஒன்று போதும்..! ஆச்சரியமாக இருக்கா..! |
பயன்படுத்தும் முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் உங்கள் முடியின் அளவிற்கு தயார் செய்து வைத்துள்ள வெந்தய பொடியை எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் தேவையான அளவு பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
ட்ரை ஹேர் உள்ளவர்களுக்கு:
முடி வறட்சியாக உள்ளவர்கள் இந்த பொடியுடன் பாலிற்கு பதிலாக முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து கலந்து கொள்ளலாம்.
பொடுகு உள்ளவர்களுக்கு:
தலையில் பொடுகு உள்ளவர்கள், இந்த பொடியுடன் பாலிற்கு பதிலாக தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
வெள்ளை முடியை 2 நிமிடத்தில் கருப்பாக மாற்றுவதற்கு செம்பருத்தி இலையில் இந்த பொருளை கலந்தால் மட்டும் போதும் .. |
அப்ளை செய்யும் முறை:
நீங்கள் முதல் நாள் இறவே தலைக்கு எண்ணெய் வைத்து கொள்ளுங்கள். பிறகு மறுநாள் காலையில் தலைமுடியில் சிக்குகள் இல்லாமல் சீவி கொள்ள வேண்டும்.
இப்போது முடியை இருபுறமாக பிரித்து கொள்ளுங்கள். முதலில் ஒரு பக்கத்தில் உள்ள முடியில் தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கை முடியின் வேர்க்கால்களில் படும்படி அப்ளை செய்து கொள்ளுங்கள். இதேபோல் மறுப்பக்க முடியிலும் அப்ளை செய்து கொள்ளுங்கள்.
இதனை அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து தலையை நன்றாக அலசி விடுங்கள்.
இவ்வாறு நீங்கள் இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தி வந்தால் விரைவில் முடி கரு கருன்னு அடர்த்தியாகவும் மென்மையாகவும் வளரும்.
தக்காளியுடன் இதை கலந்து போட்டால் போதும் நீங்களே ஆச்சரிப்படும் அளவிற்கு முகம் பளப்பளப்பாகும்..! |
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |