Homemade Hair Scrub Massage for Dandruff in Tamil
இன்றைய சூழலில் உள்ள சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக அனைவருக்குமே ஏதாவது ஒரு தலை முடி சம்மந்தப்பட்ட பிரச்சனை வந்து கொண்டே தான் உள்ளது. அப்படி வரும் பிரச்சனைகளில் மிகவும் பொதுவான ஒரு பிரச்சனை என்றால் அது பொடுகு தொல்லை தான். இந்த பொடுகு தொல்லையினை போக்குவதற்காக நீங்களும் பல வகையான முயற்சிகளை மேற்கொண்டிருப்பீர்கள். அதாவது பல வகையான ஷாம்பு, ஹேர் ஆயில் மற்றும் ஹேர் பேக் போன்றவற்றை பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் அவையாவும் அளித்த பலனை காட்டிலும் சிறந்த பலனை அளிக்கும் ஒரு குறிப்பினை பற்றி தான் இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.
Hair Scrub Massage for Dandruff at Home in Tamil:
உங்கள் தலையில் உள்ள பொடுகினை போக்க உங்கள் வீட்டில் உள்ள ஒரு சில பொருட்களை பயனபடுத்தி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி மசாஜ் செய்வதால் உங்கள் தலையில் உள்ள பொடுகு மட்டுமில்லை உங்கள் தலை முடியும் நன்கு வளரும்.
சரி வாங்க நண்பர்களே இந்த மசாஜ் செய்வதற்கு தேவையான பொருட்களை முதலில் தெரிந்து கொள்வோம்.
- தேன் – 2 டீஸ்பூன்
- ஆப்பிள் சைடர் வினிகர் – 1 டீஸ்பூன்
- சர்க்கரை – 1 டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
- தேயிலை எண்ணெய் – 2 டீஸ்பூன்
- வேப்ப எண்ணெய் – 2 டீஸ்பூன்
கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள்:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொண்டு அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
சர்க்கரையை சேர்த்து கொள்ளவும்:
அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் சர்க்கரையை கலந்து கொள்ளுங்கள்.
தேங்காய் எண்ணெயை கலந்து கொள்ளவும்:
பிறகு அதில் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
தேயிலை எண்ணெய்யை கலக்கவும்:
அடுத்து அதில் 2 டீஸ்பூன் தேயிலை எண்ணெயையும் கலந்து கொள்ளுங்கள்.
வேப்ப எண்ணெயை சேர்க்கவும்:
இறுதியாக அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் வேப்ப எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து இதனை உங்களின் தலை முடியின் வேர்களில் படுமாறு தடவி 10 முதல் 15 நிமிடங்களுக்கு நன்கு மசாஜ் செய்து கொள்ளுங்கள்.
பின்னர் வெதுப்வெதுப்பான சுடு தண்ணீரை பயன்படுத்தி தலைக்கு குளியுங்கள். இதனை வாரம் இரு முறை என தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் தலையில் உள்ள அனைத்து பொடுகும் விரைவில் நீங்குவதை நீங்களே காணலாம்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |