Hair Smoothening Cream At Home in Tamil
சிலருக்கு தலைமுடி வறண்டு ஒவ்வொரு முடியும் உடைந்து காணப்படும். இதனால் முடி கொட்டுதல் பிரச்சனை ஏற்படும். அதுமட்டுமில்லாமல் தனக்கு பிடித்த ஹேர் ஸ்டைலை கூட பண்ண முடியாத அளவிற்கு வறண்டு காணப்படும். எனவே இதனை தடுக்க அனைவரும் பார்லருக்கு சென்று முடியை Smoothening செய்வார்கள்.
அப்படி செய்வதால் நம் முடி மென்மையாக ஆனாலும் இதனை தொடர்ந்து செய்தால் நாளடைவில் முடிக்கு தீங்கு விளைவிக்கும். எனவே முடிக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் இயற்கையான பொருட்களை மட்டுமே பயன்படுத்தி வீட்டிலே முடியை மென்மையாக்கலாம். அதனை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து முடியை மென்மையாக வைத்து கொள்ளுங்கள்.
How To Do Hair Smoothening At Home Naturally in Tamil:
முடியை மென்மையாக்க தேவையான பொருட்கள்:
- உருளைக்கிழங்கு- 1
- கான்பிளவர் மாவு- 2 ஸ்பூன்
- வாழைப்பழம்- 2 (பச்சை வாழைப்பழத்தை தவிர)
Hair Smoothening Cream At Home in Tamil:
ஸ்டேப் -1
முதலில் உருளைக்கிழங்கின் தோலை சீவி விட்டு அதனை நன்றாக கழுவி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
இப்போது இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள். பிறகு இந்த பேஸ்டினை ஒரு காட்டன் துணியில் சேர்த்து அதன் சாற்றினை மட்டும் பிழிந்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -3
அடுத்து, இந்த உருளைக்கிழங்கு சாற்றுடன் கான்பிளவர் மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது இதனை அடுப்பில் வைத்து கிரீம் பதத்திற்கு வரும்வரை கலந்து எடுத்து கொள்ளுங்கள். பிறகு இதனை 15 நிமிடங்கள் வரை ஆறவைத்து விடுங்கள்.
ஸ்டேப் -4
பிறகு, வாழைப்பழத்தின் தோலை நீக்கிவிட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -5
இப்போது, இதனுடன் தயார் செய்து வைத்துள்ள கிரீமினை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தாங்க ஸ்மூதெனிங் ஹேர் கிரீம் தயார்..!
அப்ளை செய்யும் முறை:
முதலில் தலையில் எண்ணெய் வைத்து ஊறவைத்து கொள்ளுங்கள். பிறகு, முடியை சிக்கு இல்லாமல் சீவி கொள்ளுங்கள்.
அடுத்து வாகு எடுத்து முடியை இருபுறமாக பிரித்து கொள்ளுங்கள். இப்போது தயார் செய்து வைத்துள்ள Hair Smoothening Cream -ஐ ஒவ்வொரு பக்கமாக அப்ளை செய்து கொள்ளுங்கள்.
பிறகு, இதனை 15 நிமிடங்கள் ஊறவைத்து முதலில் தண்ணீரில் தலையை அலசி விடுங்கள். பிறகு நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு போட்டு அலசி விடுங்கள்.
இதை நீங்கள் ஒருமுறை பயன்படுத்தினால் மூன்று நாட்களுக்கு முடி மென்மையாக இருக்கும். எனவே இதனை நீங்கள் உங்கள் முடி எப்போதெல்லாம் வறண்டு காணப்படுகிறோதோ அப்போது இதனை பயன்படுத்தலாம்.
முகம் எவ்வளவு கருமையாக இருந்தாலும் அதை 5 நிமிடத்தில் கலராக மாற்ற இந்த பேஸ் பேக் போதும்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |