How to Lose Belly Fat Naturally in Tamil
தொப்பை மட்டும் குறைந்தால் போதும் நான் மிகவும் அழகாக இருப்பேன் என்று கவலைப்படுபவரா நீங்கள். அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காக தான். இந்த பதிவில் 15 நாட்களில் தொப்பையை குறைக்க டிப்ஸ் கூறப்பட்டுள்ளது. அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து இந்த பதிவில் கூறியுள்ள டிப்ஸை நீங்களும் ட்ரை செய்து உங்களின் தொப்பையை குறைத்துக் கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்கள் அது என்ன டிப்ஸ் அதனை எவ்வாறு Follow பண்ணுவது போன்ற தகவலைகளை விரிவாக காணலாம்.
இதையும் படியுங்கள்=> அடிவயிற்றில் உள்ள தொப்பை குறைய இதை செய்து பாருங்கள்
How to Reduce Belly Fat in Tamil:
பொதுவாக இன்றைய காலகட்டத்தில் பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவருக்குமே உள்ள ஒரே பிரச்சனை என்றால் அது தொப்பை தான். தொப்பை பொதுவாக அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள், உணவு கட்டுப்பாடு இல்லாதவர்கள் மற்றும் பிரசவம் ஆன பெண்கள் போன்றவர்களுக்கு இருக்கும்.
தொப்பைதானே என்ற அலட்சியமாக விட்டுவிடாதீர்கள். இந்த தொப்பையினால் உங்களுக்கு பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
அதனால் உங்களுக்கு தொப்பை இருந்தால் அதனை உடனடியாக குறைத்துக் கொள்ளுங்கள். அந்தவகையில் உங்களின் தொப்பையை விரைவாக குறைக்க உதவும் சில டிப்ஸ் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம்.
இதையும் படியுங்கள்=> ஒரே வாரத்தில் தொப்பையை குறைக்க டிப்ஸ்
டிப்ஸ்: 1
முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- கொள்ளு – 1/2 கப்
- பூண்டு – 8 பல்
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1/2 கப் கொள்ளினை சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் நாம் எடுத்துவைத்துள்ள 8 பூண்டுப்பற்களையும் தோலினை உரித்துவிட்டு சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளுங்கள்.
இவை நன்கு வறுப்பட்ட பிறகு அதனை எடுத்து ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதனை ஒரு மூடிப்போட்ட கண்ணாடி பாத்திரத்தில் கொட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த பொடியை மிதமான சூடு உள்ள சுடு தண்ணீருடன் 1 டீஸ்பூன் சேர்த்து உங்களுக்கு தேவையென்றால் உப்பு சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றுடன் குடித்து வாருங்கள்.
உங்களின் தொப்பை மிகவும் வேகமாக அதுவும் 10 நாட்களில் குறைவதை நீங்களே காணலாம்.
இதையும் படியுங்கள்=> தொப்பை குறையணுமா இரவில் இதைச் சாப்பிடுங்க
டிப்ஸ்: 2
முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- பிரிஞ்சி இலை – 1
- பட்டை – 2
- ஏலக்காய் – 2
- சீரகம் – 2 டீஸ்பூன்
- தண்ணீர் – 2 டம்ளர்
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் 1 பிரிஞ்சி இலை, 2 பட்டை , 2 ஏலக்காய் மற்றும் 2 டீஸ்பூன் சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.
பின்னர் அதனை வடிக்கட்டி அது மிதமான வெப்பத்துடன் இருக்கும் போதே குடியுங்கள். இதனை நீங்கள் தினமும் தொடர்ந்து இரவு தூங்க செல்வதற்கு 15 நிமிடத்திற்கு முன்பு குடித்து வருவதின் மூலம் நல்ல பலனை பெறலாம்.
ஏன் 1 வாரத்திலேயே உங்களின் தொப்பை குறைவதை நீங்களே காணலாம்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |