வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பருக்களினால் ஏற்பட்ட கருமை இருந்த இடமே தெரியாமல் மறைய வேண்டுமா..? இதை ட்ரை பண்ணுங்க போதும்..!

Updated On: October 26, 2023 1:15 PM
Follow Us:
How to Remove Black Marks on Face Quickly at Home in Tamil
---Advertisement---
Advertisement

How to Remove Black Marks on Face Quickly at Home in Tamil

இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாட்டின் காரணமாக பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவருக்குமே உள்ள ஒரு பொதுவான பிரச்சனை என்றால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் தான். அதனை போக்குவதற்காக நீங்களும் இயற்கையாகவும், செயற்கையாகவும் பல முயற்சிகளை மேற்கொண்டிருப்பீர்கள். ஆனால் அவையாவும் நிரந்தரமான தீர்வை அளித்ததா என்றால் நம்மில் பலரின் பதில் இல்லையென்றே இருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் உங்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்க உதவும் சில குறிப்புகளை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கி கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Remove Spots from Face Naturally in Tamil:

How to Remove Spots from Face Naturally in Tamil

உங்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம். முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. காய்ச்சாத பால் – 1 டேபிள் ஸ்பூன் 
  2. மஞ்சள் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன் 
  3. எலுமிச்சை பழச்சாறு – 1 டீஸ்பூன் 
  4. முல்தானி மெட்டி – 1/2 டேபிள் ஸ்பூன் 

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பாலுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து உங்களின் முகத்தில் தடவி 10 -15 நிமிடங்கள் கழித்து உங்களின் முகத்தை வெது வெதுப்பான தண்ணீரில் கழுவிக் கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் ஒரே வாரத்தில் மறைய வேண்டுமா அப்போ இந்த ஒரு பொருளை இப்படி பயன்படுத்துங்கள் போதும்

இதனை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி நன்கு பொலிவு பெறுவதை நீங்களே காணலாம்.

How to Remove Black Marks on Face Quickly in Tamil:

How to Remove Black Marks on Face Quickly in Tamil

முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. பப்பாளி – 1/2 பழம் 
  2. உருளைக்கிழங்கு – 1
  3. மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன் 
  4. பால் – 4 டீஸ்பூன் 
  5. கற்றாழை ஜெல் – 2 டீஸ்பூன் 
  6. முல்தானி மெட்டி – 1/2 டேபிள் ஸ்பூன் 

முதலில் 1/2 பப்பாளி பழம், 1 உருளைக்கிழங்கு, 2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 4 டீஸ்பூன் பால் மற்றும் 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி கொள்ளுங்கள்.

பின்னர் இதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டியை சேர்த்து நன்கு கலந்து உங்களின் முகத்தில் தடவி 10 -15 நிமிடங்கள் கழித்து உங்களின் முகத்தை வெது வெதுப்பான தண்ணீரில் கழுவி கொள்ளுங்கள்.

இதனை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி நன்கு பொலிவு பெறுவதை நீங்களே காணலாம்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை ஒரே  நாள் இரவில் போக்க இதை மட்டும் செய்யுங்க

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now