இரண்டு பொருட்களை வைத்து 5 நாட்களில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளி மற்றும் கருவளையம் மறைய இதை Follow பண்ணுங்க..!

Advertisement

முகத்தில் உள்ள கரும்புள்ளி மறைய

ஆண், பெண் இருவரில் யாராக இருந்தாலும் சரி முகத்தில் பருக்கள் வருவதை தவிர்க்க முடியாது. சரி பருக்கள் வருவதை தான் தடுக்க முடியவில்லை என்றாலும் கூட அந்த பருக்களினால் ஏற்படும் கரும்புள்ளிகளையும் மறைய வைப்பது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இதோடு மட்டும் இல்லாமல் கருவளையமும் சேர்ந்து நமது முகத்தின் அழகினை கெடுத்துவிடும். இப்படி இரண்டு விதமான பிரச்சனைகளும் ஒன்றாக வந்தால் உங்களுக்கு முதலில் எதனை சரி செய்வது என்பது ஒரு குழப்பாக இருக்கும். இனிமேல் உங்களுக்கு எந்த விதமான குழப்பமும் இல்லாமல் ஒரே நேரத்தில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளி மற்றும் கருவளையம் மறைய என்ன செய்ய வேண்டும் என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

How to Remove Dark Circles and Dark Spots on Face:

 முகத்தில் உள்ள கரும்புள்ளி மறைய

உங்களுடைய முகத்தில் இருக்கும் கரும்புள்ளி மற்றும் கருவளையம் மறைய முதலில் உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து  இயற்கையான முறையில் கிரீம் தயார் செய்ய வேண்டும். 

கிரீம் தயார் செய்ய தேவையான பொருட்கள்:

  • வெந்தயம்- 2 தேக்கரண்டி 
  • கற்றாழை- சிறிய துண்டு

கருவளையம் மறைய என்ன செய்ய வேண்டும்:

 கரும்புள்ளி மறைய கிரீம்

கரும்புள்ளி மறைய வெந்தயம்:

வெந்தயத்தில் வைட்டமின் C இருப்பதால் இது முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை மறைய வைத்து முகம் அழகாக இருக்க உதவி செய்யும்.

அதனால் முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து சிறிது நேரம் வறுத்து கொள்ளுங்கள்.

வெந்தயத்தை வறுத்தல்:

வெந்தயம சிறிது நேரம் பொன் நிறமாக வரும் வரை வறுத்து கொண்டு அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடர் போல அரைத்து ஒரு கிண்ணத்தில் வைத்து விடுங்கள்.

முகத்திற்கு கற்றாழை:

அடுத்து ஒரு சிறிய துண்டு கற்றாழையை எடுத்துக்கொண்டு அதனை 2 நிமிடம் சுத்தமான தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள்.

கற்றாழை ஜெல் தயாரித்தல்:

2 நிமிடம் கழித்த பிறகு கற்றாழையை சுத்தமாக அலசிக்கொண்டு அதிலிருந்து 3 தேக்கரண்டி அளவிற்கு கற்றாழை ஜெல் எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்து கொள்ளுங்கள்.

முகத்திற்கு கிரீம் தயார் செய்தல்:

இப்போது கற்றாழை ஜெல் உள்ள கிண்ணத்தில் 1 தேக்கரண்டி வெந்தயம் பவுடர் சேர்த்து நன்றாக 5 நிமிடம் கலந்து ஒரு கண்ணாடி பாத்திரத்தில் வைத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் இப்போது முகத்திற்கு போட கிரீம் தயார் ஆகிவிட்டது.

இதையும் படியுங்கள்⇒ கேரள பெண்களை போல நம்முடைய தலை முடியும் கிடுகிடுவென வளர்வதற்கு இந்த ஒரு எண்ணெய் போதும்..!

Cream Apply to Face:

கருவளையம் மறைய என்ன செய்ய வேண்டும்:

நீங்கள் தயார் செய்து வைத்துள்ள கிரீமை இரவு தூங்க செல்வதற்கு முன்பு முகத்தில் கருவளையம் மற்றும் கரும்புள்ளி உள்ள இடத்தில் அப்ளை செய்து விட்டு 5 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள்.

5 நிமிடம் கழித்து பாருங்கள் உங்களுடைய முகத்தில் மாற்றம் தெரியும். 5 நாட்களில் முற்றிலுமாக முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் கருவளையம் அனைத்தும் மறைந்து முகம் அழகாக மாறிவிடும். 

 இதையும் படியுங்கள்⇒ வெறும் 3 பொருட்களை வைத்து வெள்ளை முடியை கருப்பாகவும், அடர்த்தியாகவும் மற்றும் நீளமாகவும் வளர செய்யலாம்..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement