இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..! உங்க முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் ஒரே இரவில் மாயமாய் மறைந்துவிடும்…!

Advertisement

How To Remove Face Black Dots

ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி முகத்தில் பருக்கள் வருவது இயற்கை தான். ஆனால் ஆண்களை விட பெண்களுக்கு தான் பருக்கள் அதிகமாக காணப்படுகிறது. இந்த பருக்கள் நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறிவிடுகின்றது. இந்த கரும்புள்ளிகளை போக்க வேண்டும் என்பதற்காக கடைகளில் விற்கும் இரசாயனம் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் சருமத்தில் மேலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த கரும்புள்ளிகளை ஒரே இரவில் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்யலாம். அது எப்படி என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைய:

காபி தூள்

  1. காபி தூள் – 1 ஸ்பூன்
  2. தேன் – 1/2 ஸ்பூன்

முதலில் ஒரு கிண்ணத்தில் காபி தூள் எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் 1/2 ஸ்பூன் அளவிற்கு தேன் சேர்த்து அதை பேஸ்ட் போல நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதை உங்கள் முகத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த பேஸ்ட் உங்கள் முகத்தில் 10 நிமிடம் அப்படியே இருக்கட்டும். 10 நிமிடம் கழித்து உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ள வேண்டும்.

தேன் பயன்கள்

இதுபோல வாரத்திற்கு 3 முறை அல்லது தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், கண்ணை சுற்றி இருக்கும் கருவளையம், கருந்திட்டுகள் போன்றவை இருந்த இடம் தெரியாமல் மாயமாய் மறைந்துவிடும்.  காபி தூள் சருமத்தில் இருக்கும் கருமையை போக்க உதவுகிறது. தேன் சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசையை நீக்கி முகத்தில் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இது முகத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது.  

முகத்தில் கரும்புள்ளிகள் அதிகம் இருக்கிறதா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

எலுமிச்சை சாறு எடுத்து கொள்ளவும்: 

எலுமிச்சை சாறு எடுத்து கொள்ளவும்

  1. காபி தூள் – 1 ஸ்பூன்
  2. எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்

அடுத்து ஒரு கிண்ணத்தில் காபி தூள் 1 ஸ்பூன் அளவிற்கு எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் எலுமிச்சை பழத்தின் சாறு 2 ஸ்பூன் அளவிற்கு எடுத்து கொள்ள வேண்டும். பின் இரண்டையும் நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும்.

பின் இந்த பேஸ்டை முகத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த பேஸ்ட் முகத்தில் 10 நிமிடம் அப்படியே இருக்கட்டும். 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவி கொள்ளவும். இந்த பேஸ்டை முகம் மட்டுமில்லாமல் கழுத்து பகுதி, கை கால் முட்டிகளில் இருக்கும் கருமை, அக்குள் கருமை போன்ற இடங்களில் அப்ளை செய்யலாம்.

 இதுபோல வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைய தொடங்கும். இது கழுத்து பகுதி, கை கால் முட்டிகளில் இருக்கும் கருமை, அக்குள் கருமை போன்றவற்றையும் நீக்கிவிடும். இதை ட்ரை பண்ணுங்க நண்பர்களே நல்ல ரிசல்ட் உங்களுக்கு கிடைக்கும்..!  
3 நாட்களில் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைய இதை ட்ரை பண்ணுங்க..!

 

இதையும் படியுங்கள் ⇒ முகத்தில் எண்ணெய் பசை நீங்கி, பருக்களை நீக்க இந்த ஒரு பொருள் போதும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement