சருமத்தில் இருக்கும் கருமையை நீக்க அழகு குறிப்பு..! Suntan Removal Home Remedy..!

Advertisement

கருமை நீங்கி முகம் வெள்ளையாக மாற..! Suntan Removal Cream For Face..!

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் அனைவருக்கும் பயனுள்ள ஒரு அழகு குறிப்பு தான் இன்னக்கி நாம பார்க்க போகிறோம். சிலருக்கு வெயிலில் செல்வதினால் முகம்(suntan removal face pack) கருமையாக மாறிவிடும் என்று பலர் நினைப்பார்கள். சிலருக்கு முகம் எப்போதும் பளிச்சென்று இல்லாமல் காணப்படும். இது போன்ற பிரச்சனையை சரி செய்ய இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ் படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!

newமுகம் பளபளக்க செய்யும் முட்டையின் வெள்ளைக்கரு..!

முக கருமை நீங்க தேவையான பொருட்கள்:

  1. கடலை மாவு – சிறிதளவு 
  2. தயிர் – 1 ஸ்பூன் 
  3. ஆரஞ்ச் சாறு – 1 ஸ்பூன் 
  4. எலுமிச்சை – 1/2 நறுக்கியது 

செய்முறை விளக்கம்:

முதலில் 1 பவுலில் கடலை மாவு சிறிதளவு சேர்க்க வேண்டும். கடலை மாவுடன் தயிர் 1 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கொள்ள வேண்டும். இதனுடன்ஆரஞ்ச் சாறு 1 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த கலவையுடன் எலுமிச்சை ஒன்றை நறுக்கி முகத்தில் கருமை உள்ள இடத்தில் இந்த கலவையை 5 நிமிடம் தடவி வர வேண்டும். முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்த பின்னர் நீரால் முகத்தை கழுவி கொள்ளலாம். முகம் கருமையாக இருக்கிறது என்ற கவலையே வேண்டாம். இந்த டிப்ஸை எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க நல்ல மாற்றம் கிடைக்கும்.

newஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ் | 100% Natural beauty tips in tamil

குறிப்பு 1:

நமது சருமத்தில் கடலை மாவு பயன்படுத்துவதினால் முகத்தில் இருக்கும் டாக்சின்ஸ்களை அகற்றி முகத்தை எப்போதும் வெள்ளையாக வைத்திருக்கும்.

குறிப்பு 2:

தயிரில் சிங்க் மற்றும் லாக்டிக் அமிலம் நிறைந்துள்ளது. இதனால் வெயிலில் சென்று வந்தால் முகத்தில் ஏற்படும் கருமை பிரச்சனையை குறைக்கும் தன்மை பெற்றது.

குறிப்பு 3:

ஆரஞ்ச் மற்றும் எலுமிச்சையில் அதிகமாக சிட்ரஸ் இருக்கிறது. இந்த இரண்டிலும் வைட்டமின் சி சத்துகள் அடங்கியுள்ளது. வெயிலில் சென்று வருவதினால் கருமை பிரச்சனையை முற்றிலுமாய் குறைத்து விடும்.

newமுகம் பளிச்சென்று இருக்க இயற்கை அழகு குறிப்புகள்..! face brightness tips in tamil..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami
Advertisement