பார்லருக்கு செல்லாமல் ஹேர் Shining செய்வதற்கு ஒரு முறை இதை மட்டும் பயன்படுத்தி பாருங்கள்..!

Advertisement

How to Shiny Hair Naturally at Home in Tamil 

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி இளமை முதல் முதுமை வரை எப்போதும் முடி உதிராமல் மற்றும் பளபளப்பாக இருக்க வேண்டும் நினைப்பார்கள். அப்படி முடி உதிராமல் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக சில எண்ணெய்களையும் மற்றும் முடியை பளபளப்பாக வைப்பதற்கு என்று சில கிரீமினை கடைகளில் வாங்கி பயன்படுத்துவார்கள். அதிலும் குறிப்பாக இந்த நவீன காலத்தில் முடியை எப்போதும் ஷைனிங்காக வைத்து இருக்க வேண்டும் என்று தான் பலரும் விரும்புகின்றனர். அதனால் இன்றைய பதிவில் வீட்டில் இயற்கையான முறையில் முடியை உங்களுக்கு பிடித்த மாதிரி ஷைனிங்காக வைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

 Hair Shine Home Remedies in Tamil:

 hair shine home remedies in tamil

முடியின் வளர்ச்சியை அதிகரிக்க மற்றும் ஷைனிங்காக மாற்றுவதற்கு இயற்கையான முறையில் முதலில் ஒரு ஹேர் பேக் தயார் செய்ய வேண்டும்.

தேவையான பொருட்கள்:

  1. தேங்காய்- 1 மூடி
  2. கற்றாழை- சிறிய துண்டு  
  3. கான்பிளவர் மாவு- 4 தேக்கரண்டி 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வாரம் 2 முறை இதை அப்ளை செய்தால் போதும் முடி கருமையாகவே இருக்கும்..!

முடி பளபளப்பாக இருக்க:

ஸ்டேப்- 1

முதலில் நீங்கள் எடுத்துவைத்துள்ள தேங்காயினை நன்றாக துருவி கொள்ளுங்கள். அதன் பிறகு துருவி வைத்துள்ள தேங்காயினை மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.

நீங்கள் அரைக்கும் தேங்காய் பால் கெட்டியாக இல்லாமல் தண்ணீராக இருக்கும் படி எடுத்துக்கொண்டு அதனை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

அடுத்த கற்றாழையை எடுத்துக்கொண்டு அதனை சுத்தமான தண்ணீரில் அலசி அதிலிருந்து 5 தேக்கரண்டி அளவிற்கு கற்றாழை ஜெல் எடுத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் 2 கப் தேங்காய் பால் மற்றும் 4 தேக்கரண்டி கான்பிளவர் மாவு சேர்த்து  நன்றாக 5 நிமிடம் கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 4

5 நிமிடம் கழித்த பிறகு தேங்காய் பால் கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் அதனை அடுப்பில் இருந்த அடுப்பில் இருந்து இறக்கி சிறிது நேரம் ஆற விடுங்கள்.

ஸ்டேப்- 5

அடுத்ததாக ஆற வைத்து தேங்காய் பால் கிரீமுடன் 5 தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து மீண்டும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது முடிக்கு ஹேர் பேக் தயாராகிவிட்டது.

ஸ்டேப்- 6

நீங்கள் தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கை தலையின் உச்சி முதல் அடி வரை நன்றாக அப்ளை செய்து 20 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.

20 நிமிடம் கழித்த பிறகு வழக்கம் போல் ஷாம்பு போட்டு தலையை நன்றாக அலசி விடுங்கள். இதை மட்டும் நீங்கள் செய்தால் போதும் முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும் மற்றும் முடி ஷைனிங்காக மாறிவிடும். 

இதையும் படியுங்கள்⇒ நெல்லிமுள்ளி ஒன்று போதும் நரைமுடியை நிரந்தரமாக கருமையாக்க..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement