என்றும் இளமையாக இருக்க என்ன செய்ய வேண்டும்
பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் என்றும் இளமையாகவும், வயதானவர்கள் போல் தெரியாமல் இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனால் வயது ஆகின்றது என்பதை தோற்றமே வெளிக்காட்டும். வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களின் அழகை மேம்படுத்துவதில் அக்கறை காட்டுவார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் பெண்கள் வீடே உலகம் என்று இருப்பார்கள். வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தாலும் சரி, வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தாலும் சரி இந்த பதிவில் சொல்வதை செய்தாலே போதும் என்றும் இளமையாக இருக்கலாம்.
முக்கியமானது நீங்கள் இளமையாக இருப்பதற்கு முகத்தை மட்டும் இளமையாக காட்டுவதற்கு தான் கிரீம் மற்றும் இயற்கை குறிப்புகள் பயன்படுத்திருப்பீர்கள். இளமையாக காட்டுவதற்கு முகத்தை மட்டும் அழகு படுத்தினால் போதாது. முழு உடலையும் இளமையாக காட்ட வேண்டும். அதற்காக நீங்கள் இதை அப்பளை செய்யுங்க அதை பண்ணுங்க என்றெல்லாம் சொல்ல போவதில்லை. நீங்கள் தினமும் செய்யும் வேலைகளில் சிறிது மாற்றம் செய்தாலே போதும் என்றும் இளமையாக இருக்கலாம். அது என்னெவென்று என்று தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறதா..! இனிமேலும் நேரத்தை கடத்த வேண்டாம் பதிவினுள் செல்லலாம் வாங்க..!
இதையும் படியுங்கள் ⇒ இளமையான தோற்றத்தை பெறுவதற்கு இந்த ஒரு பொருள் இருந்தால் மட்டும் போதும்
முகத்தை கழுவ வேண்டும்:
பொதுவாக வேலைக்கு செல்வபவர்கள் அடிக்கடி முகத்தை கழுவுவார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் பெண்கள் குளிக்கும் போது மட்டும் தான் முகத்தை கழுவுவார்கள். வேலைக்கு செல்வபவர்களாக இருந்தாலும், வீட்டில் இருப்பவராக இருந்தாலும் சரி ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறை முகத்தை கழுவுங்கள். நீங்கள் முகத்தை ஒரு தடவை மட்டும் கழுவினால் முகத்தில் அழுக்குகள் தேங்கி முகத்தில் பரு மற்றும் எண்ணெய் பசை நிறைந்த சருமமாக மாறி விடும்.
நேரத்தில் உணவு:
இந்த உலகில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் உணவு ரொம்ப முக்கியமானது. ஆனால் அந்த உணவை எப்படி எடுத்து கொள்கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் எந்த உணவு எடுத்து கொண்டாலும் சரியான நேரத்திற்கு எடுத்து கொள்ளுங்கள். நேரத்திற்கு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லை அழகிற்கும் பங்கு வகிக்கிறது. அதனால் நேரத்திற்கு உணவு சாப்பிட்டு உங்களின் உடலை இளமையாக வைத்து கொள்ளுங்கள்.
தண்ணீர் அருந்தும் முறை:
மனிதனாக பிறந்த அனைவருக்கும் உணவு இல்லாமல் கூட இருந்து விடலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் இருக்க முடியாது. ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் கட்டாயமாக குடிக்க வேண்டும். இப்படி தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல் அழகிற்கு பெரும் பங்கு வகிக்கிறது. அதாவது முகத்தில் வறட்சி ஏற்படாமல் உடலை மினுமினுப்பாக வைத்திருக்கும்.
நமக்கு தூக்கம் தான் முக்கியம்:
மேல் கூறப்பட்டுள்ள அனைத்தையும் செய்து விடுவீர்கள். ஆனால் இந்த ஒரு விஷயத்தில் கோட்டை விட்டுடாதீர்கள். ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று யோசிக்கலாம்.! இப்பொழுது யாரு சரியான நேரத்திற்கு தூங்குகிறீர்கள். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை போனை தான் அதிகமாக பார்க்கிறார்கள். இதனால் தாமதமாக தூங்குகிறார்கள். நீங்கள் சரியான நேரத்திற்கு தூங்காமல் இருந்தால் கண்களை சுற்றி கருவளையம் ஏற்படும். மேலும் முகம் மற்றும் தோள்களில் சுருக்கங்கள் ஏற்படும். அதனால் சரியான நேரத்திற்கு தூங்கி இளமையாக இருங்கள்.
முக வசீகர யோகா:
நீங்கள் இளமையாக இருக்கவும், வசீகர தோற்றத்தை பெறுவதற்கும் சில உடற்பயிற்சி செய்வது அவசியமானதாகும். அழகிற்காக உடற்பயிற்சி உள்ளது. அதனால் உடற்பயிற்சி செய்து வசீகர தோற்றத்தை பெறுங்கள்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |