Kan Imai Mudi Valara
பொதுவாக நம்முடைய உடல் உறுப்புகளில் கண் என்றாலே அதிக முக்கியத்துவம் கொடுப்போம். அது ஆரோக்கியமாக இருந்தாலும் சரி அழகாக இருந்தலும் சரி கண்ணிற்கு தான் முதல் இடம். இந்த கண்களுக்கு அதில் இருக்கும் புருவ முடிகளும் மற்றும் இமை முடிகளும் தான் அழகு சேர்க்கின்றது. ஆனால் இந்த இமை முடி பிரச்சனை என்பது பலருக்கும் இருக்கிறது. இமை முடி அடர்த்தியாக வளர வேண்டும் என்பதற்காக பணம் செலவு செய்து பார்லரில் நிறைய ட்ரை செய்து இருப்பார்கள். இனி நீங்கள் பார்லருக்கும் செல்ல வேண்டாம் மற்றும் இமை முடி வளரவில்லை என்று கவலையும் பட வேண்டாம். இன்றைய அழகுக்குறிப்பு பதிவில் 7 நாட்களில் இமை முடி அடர்த்தியாக நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வளர என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம்.
இதையும் படியுங்கள்⇒ முகப்பரு, சரும வறட்சி, ஆயில் ஃபேஸ், முகம் வெள்ளையாக இவை அனைத்திற்கும் இந்த ஒரு பொருள் போதும்..!
கண் இமை அடர்த்தியாக வளர:
தேவையான பொருட்கள்:
- கற்றாழை ஜெல்- சிறிய துண்டு
- சின்ன வெங்காயம் சாறு- 5
- ஆளி விதை ஜெல்- 1 ஸ்பூன்
- விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன்
- வைட்டமின் E மாத்திரை- 1
கண் இமை முடி அடர்த்தியாக வளர என்ன செய்வது?
ஸ்டேப்- 1
முதலில் எடுத்துவைத்துள்ள 5 சின்ன வெங்காயத்தில் இருந்து 1 ஸ்பூன் அளவிற்கு சாறு எடுத்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
அடுத்து சிறிய கற்றாழை துண்டை எடுத்துக்கொண்டு அதனை சுத்தமாக அலசி விடுங்கள். பின்பு அந்த கற்றாழையில் இருந்து 1 ஸ்பூன் அளவிற்கு ஜெல் எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 3
இப்போது ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் ஆளி விதை ஜெல் இரண்டினையும் ஊற்றி சிறிது நேரம் கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 4
சிறிது நேரம் கழித்த பிறகு விளக்கெண்ணெய் கலந்து வைத்துள்ள கிண்ணத்தில் 1 ஸ்பூன் சின்ன வெங்காயம் சாறு மற்றும் 1 ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக 5 நிமிடம் கலந்து விடுங்கள்.
ஸ்டேப்- 5
5 நிமிடம் கழித்த பிறகு கிண்ணத்தில் கலந்து வைத்துள்ள ஜெல்லுடன் வைட்டமின் E மாத்திரையின் உள்ளே இருக்கும் மருந்தினை மட்டும் அதனுடன் சேர்த்து நன்றாக 1 ஸ்பூனால் கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 6
இப்போது நீங்கள் தயார் செய்த ஜெல்லை மஸ்காரா போட வைத்திருக்கும் பிரஷால் கலந்து அதனை தொட்டு உங்களுடைய கண் இமைகளில் பொறுமையாக அப்ளை செய்யுங்கள்.
ஸ்டேப்- 7
இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை அப்ளை செய்ய வேண்டும். அதாவது இரவு தூங்குவதற்கு முன்பு அப்ளை செய்து காலையில் எழுந்ததும் கழுவி விடுங்கள். அதன் பிறகு குளிக்க செல்வதற்கு முன்பு அப்ளை செய்து குளித்து விடுங்கள்.
இது மாதிரி நீங்கள் செய்தால் 7 நாட்களில் இமை முடி அடர்த்தியாக அழகாக வளர்ந்து இருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
எவ்வளவு கருமையாக இருந்தாலும் வெள்ளையாக மாறமுடியும் இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |