கருஞ்சீரகம் ஹேர் டை 10 நிமிடத்தில் வெள்ளை முடி கருப்பாக மாறிடும்..! Result எப்படி இருக்கு ?

Advertisement

கருஞ்சீரகம் ஹேர் டை தயாரிக்கும் முறை

Karunjeeragam Hair Dye in Tamil – ஹாய் பிரண்ட்ஸ்.. வணக்கம் இப்போது எல்லாம் சின்ன வயசிலேயே அனைவருக்கும் வெள்ளை முடி வந்துடுது. இதன் காரணமாகவே வெள்ளை முடியை மறைக்க கடைகளில் விற்கப்படும் ஹேர் டையை பயன்படடுத்துவிடுறாங்க. பயன்படுத்திய உடனேயே நல்ல ரிசல்ட் கடைச்சலும் அது கொஞ்சம் நாட்களிலேயே திரும்ப பழைய நிலைமைக்கு மாறிவிடும். அது மட்டும் இல்லாமல் கொஞ்சம் இடத்துல இருந்த வெள்ளை முடி அதை பயன்படுத்திய கொஞ்சம் நாளிலேயே அனைத்து முடியையும் வெளியாக மாற்றிவிடும். ஆக இயற்கையான முறைகளை பின்பற்றி வெள்ளை முடியை எப்படி கருமையாக மாற்றலாம் என்று இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • சின்ன வெங்காயம் – 5
  • வெங்கியத்தின் தோல் – ஒரு கையளவு
  • கருஞ்சீரகம் – ஒரு ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை ஜெல் – ஒரு ஸ்பூன்

கருஞ்சீரகம் ஹேர் டை செய்முறை – Karunjeeragam Hair Dye in Tamil:

முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் ஒரு கைப்பிடி அளவு வெங்காயத்தின் தோல் மற்றும் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளுங்கள். அதாவது நன்கு காருக்கும் வரை வறுக்க வேண்டும்.

பிறகு நன்றாக ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் நன்றாக பவுடர் போல் அரைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு அதனை ஒரு சுத்தமான பவுலில் மாற்றில் அதனுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள்.

பின் ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்திருங்கள், மறுநாள் தலை முடியில் எக்கெல்லாம் வெள்ளை முடி இருக்கிறதோ அங்கு இந்த பேஸ்டை அப்ளை செய்து ஒருமணி நேரம் வரை காத்திருங்கள். பிறகு தலை அலசுங்கள் இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் வெள்ளை முடி கருமையாக மாறும். ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள் நன்றி.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 3 பொருள் போதும் 7 நாளில் வெள்ளை முடியை முழுமையாக மாற்றிடலாம்..! கருவேப்பிலை ஹேர் டை..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami
Advertisement