kerala women hair secret in tamil..!
ஹலோ நண்பர்களே… பொதுநலம்.காம் பதிவின் இனிமையான நேயர்களே… இன்றைய பதிவில் நாம் கேரளா பெண்களின் கூந்தல் ரகசியத்தை பற்றி தான் பார்க்க போகிறோம். கேரள நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் நீளமான முடி இருக்கும். அவர்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு முடி இருக்கிறது என்று அனைவரிடமும் ஒரு கேள்வி இருக்கும்.
பெண்கள் அனைவருக்குமே நீளமான அடர்த்தியான முடி இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதேபோல சிலருக்கு கேரள பெண்களின் கூந்தலை போல முடி வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். அவர்கள் அப்படி என்ன தான் முடிக்கு தடவுகிறார்கள் என்று கேட்பீர்கள். அதற்கான பதிலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
கேரளா பெண்களின் கூந்தல் ரகசியம் என்ன..?
கேரளா பெண்களுக்கு நீளமான மற்றும் அடர்த்தியான முடி இருக்கும். முடி நீளமாக வளர வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் இந்த பதிவை படித்து பயன் பெறுங்கள். கேரளா பெண்களின் கூந்தல் ரகசியத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
ஸ்டெப் -1
ஒரு கப் தேங்காய் எண்ணெயுடன் அரை கப் விளக்கெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து லேசாக சூடேற்ற வேண்டும்.
பின்னர் இந்த எண்ணெயுடன் கருஞ்சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து எண்ணெய் நுரை போல பொங்கி வரும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
பின் அடுப்பை அணைத்து விட்டு கருஞ்சீரகம் மற்றும் வெந்தயம் எண்ணெயுடன் நன்கு ஊறிய பின்னர் அதை வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது இந்த எண்ணெயை நீங்கள் வாரம் 3 முறை தலையின் அடிப் பகுதியில் இருந்து முடியின் நுனி வரை நன்றாக தடவ வேண்டும். இப்படி செய்து வருவதால் நீளமான மற்றும் அடர்த்தியான முடியை பெறலாம்.
ஸ்டெப் -2
கறிவேப்பிலை, வெந்தயம், செம்பருத்தி பொடி, சின்ன வெங்காயம், கற்றாழை ஜெல் இவற்றை எல்லாம் தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும். பின் இவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும்.
பின் ஒரு கடாயில் 500 ml தேங்காய் எண்ணெயை ஊற்றி அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள கலவையும் சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் இந்த எண்ணெயை ஆற வைக்க வேண்டும். பின் இதை நீங்கள் முடிக்கு தடவி வரலாம். முடியின் அடிப்பகுதியில் இருந்து நுனி பகுதி வரை நன்றாக தடவ வேண்டும்.
இப்படி செய்து வருவதால் முடி நீளமாக வளரும். அடர்த்தியான மற்றும் கருமையான முடி கிடைக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 முடி எவ்வளவு வெள்ளையாக இருந்தாலும் தேங்காய் எண்ணெய்யுடன் இதை கலந்து தேய்த்தால் முதுமையில் கூட முடி கருப்பாக இருக்கும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |