முடி உதிர்வை தடுக்க | Long Hair Growth Aloe Vera Oil in Tamil
ஹலோ நண்பர்களே..! பொதுவாக நம் அனைவருக்குமே தலைமுடி பிரச்சனை என்பது கட்டாயம் இருக்கும். அதிலும் தலை முடியில் மட்டுமே பல பிரச்சனைகள் இருக்கிறது. அதாவது முடி உதிர்வு, பொடுகு தொல்லை, நரைமுடி மற்றும் பேன் தொல்லை போன்ற பிரச்சனைகளை தான் கூறுகிறேன். ஆனால் நம்மில் பலரும் இந்த பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட எண்ணெய்கள் மற்றும் ஷாம்புக்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இதனால் நாளடைவில் இருக்கின்ற முடியும் கொட்ட ஆரம்பித்து விடுகிறது. அதனால் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் தலைமுடி பிரச்சனை அனைத்திற்கும் தீர்வு தரும் எண்ணெயை பற்றி பார்க்கலாம் வாங்க..!
தேங்காய் எண்ணெய் எடுத்து கொள்ளவும்:
தலைமுடி முடி வளர்ச்சி என்றால் தேங்காய் எண்ணெயை இல்லாமல் எப்படி இருக்கும். முடியின் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் நாம் இன்று நம் முடிக்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெய் எடுத்து கொள்ள போகிறோம்.
அதுபோல நீங்களும் உங்கள் முடிக்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெய் எடுத்து கொள்ளுங்கள்.
கரும்புள்ளிகள் முக அழகை கெடுத்து விடுகிறதா.. அப்போ உருளைக்கிழங்கை இப்படி பயன்படுத்துங்க
கற்றாழை எடுத்து கொள்ளவும்:
அடுத்து நாம் எடுத்து கொள்ளும் பொருள் தான் கற்றாழை. கற்றாழையில் பல்வேறு சத்துக்கள் இருக்கின்றன. அவை உடல் ஆரோக்கியத்திற்கும், முடியின் வளர்ச்சிக்கும் மற்றும் சருமத்தை பாதுகாக்கவும் உதவுகிறது. கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தி, முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர செய்கிறது.
அதனால் நாம் தேவையான அளவு கற்றாழையை எடுத்து அதை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். பின் அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைக்கவும்:
அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் நாம் எடுத்து வைத்துள்ள தேங்காய் எண்ணெயை ஊற்றி கொள்ள வேண்டும். எண்ணெய் சூடாவதற்கு முன்னரே அதில் அரைத்து வைத்துள்ள கற்றாழையை ஊற்றி கொள்ள வேண்டும்.
பின் எண்ணெயை நன்றாக கொதிக்கவிட்டு எண்ணெயின் நிறம் மாறியதும் அதை வடிகட்டி ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும்.
இப்பொழுது எண்ணெய் தயார். இந்த எண்ணெயை எப்பொழுதும் தடவுவது போல தடவி வர வேண்டும். இதுபோல தடவி வந்தால் முடி உதிர்வு பிரச்சனை நின்று முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
👉 வால் போல் இருக்கும் உங்க முடியை கட்டுக்கடங்காமல் காடு போல் வளர வைக்க இதை மட்டும் பண்ணுங்க போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |